சனி, 12 டிசம்பர், 2015

Whit Field பிதுக்கு மருந்து தட்டுப்பாட்டை தமிழக அரசு போக்குமா ?


சேற்றுப் புண்ணை குணப்படுத்த தேவையான Whit Field பிதுக்கு மருந்து பல இடங்களிலும் தட்டுப் பாடாக உள்ளதாக மருத்துவ முகாம்களுக்கு செல்லும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே,தமிழக அரசு அம்மருந்தின் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை மட்டுமே நம்பி இருந்தால் இந்த நிலைதான் ஏற்படும்.
பேரிடர் காலங்களில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க முடியாது.
இது போன்ற நிலை ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட பொழுதும் ஏற்பட்டது.அப்பொழுத் தட்டம்மை தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்பொழுது, சில மருந்துகள் பதுக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அரசு இதை கண்காணிக்க வேண்டும்.
பேரசிட்டமால் மாத்திரை முதல் செப்டிரியாக்ஸோன் ஆன்டி பயாட்டிக் வரை அனைத்து மருந்துகளையும் வாங்கிக் கொடுக்கும் அமைப்பாக , அதாவது ஏஜன்டாக மட்டுமே TNMSC உள்ளது.
இது வருந்தத் தக்கது.
தமிழக அரசே அத்தியாவசிய மருந்துகளை TNMSC மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் பல மருந்துகளை மிகக் குறைந்த விலைக்கு அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம்.பொது மார்கெட்டிற்கும் வழங்கலாம். அம்மா மருந்தகங்களை , அதாவது அரசு மருந்தகங்களை அதிகரித்து அவற்றின் மூலமும் குறைந்த விலையில் மருந்துகளை மக்களுக்கு முடியும்.
மிக முக்கியமாக,பேரிடர் காலங்களில், மருந்துகளின் தட்டுப்பாடு இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
மருந்துகள் பதுக்கப்படுவதையும் மறைமுகமாக முறியடிக்க முடியும். .
தரமான , கலப்படம் இல்லாத மருந்துகளையும் வழங் முடியும். .
ஏராளமான மருந்தாளுநர்களுக்கும் வேலை வாய்பை இதன் மூலம் வழங்க முடியும்.
தமிழக அரசு சிந்திக்குமா ?
சிந்திக்க வேண்டும் , சிந்திக்கட்டும்!
இப்பொழுது ......
உடனடியாக , விட் ஃபில்டு பிதுக்கு மருந்தை வாங்கிக் கொடுக்கட்டும்.
தட்டுப்பாட்டை போக்க வேண்டும் .
இதுவே எமது வேண்டுகோள்.
- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
09940664343 //// 094441 83776.