வியாழன், 17 ஆகஸ்ட், 2017

இந்தியர்களை தூக்கி எறியும் சீன நிறுவனங்கள்! August 17, 2017

இந்தியர்களை தூக்கி எறியும் சீன நிறுவனங்கள்!


கத்தார் மற்றும் ஈரான் நாடுகளில் இருக்கக்கூடிய சீன நிறுவனங்களில் இருந்து இந்தியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கத்தாரின் தோஹா, ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பொருளாதார நகரங்களில் சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவருகின்றது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் அனைவரும் கடந்த சில நாட்களாக அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுவருகின்றனர்.  இந்தியர ஊழியர்கள் சீனாவின் தொழில்நுட்பங்களை திருடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இந்தியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பலரும் தெரிவித்துவருகின்றனர். 

இருப்பினும், இந்திய - சீன எல்லைப்பகுதியான டோக்லாம் பகுதியில் நிலவும் எல்லைப்பிரச்சனையே இந்த பணிநீக்கத்திற்கான முக்கிய காரணமாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வராதபோதிலும், இந்தியர்கள் பலரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டோல்காம் பிரச்சனை!

இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகள் இணையும் இடத்தில் உள்ளது டோக்லாம் பீடபூமி. சிக்கிம் மாநிலத்தின் எல்லையில், இந்தியா - சீனா - பூட்டான் நாடுகள் ஒன்றுசேரும் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில், கடந்த ஜூன் மாதத்தில் சாலைப்பணிகளை மேற்கொண்டது சீனா. இந்த பகுதியை நீண்டகாலமாக சீனாவும், பூட்டானும் உரிமை கொண்டாடிவருகின்றனர். 



இந்த பகுதியில் சீனா சாலை அமைக்கும் பட்சத்தில் இந்தியாவின் கேந்தர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் ‘கோழியின் கழுத்து’ எனப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழிவகுக்கும். 



இந்நிலையில் , டோக்லாம் பகுதியில் சீனாவின் சாலையமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய இந்தியா, அங்கே இந்திய படைகளை குவித்தது. இதனால் கோபடைந்த சீனா தங்களுடைய படைகளையும் அங்கு நிறுத்தி போர் பயிற்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதனால் இருநாட்டு எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்து அசாதாரான சூழல்நிலை நிலவிவருகிறது.



இதனால் ஆத்திரமடைந்துள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனம் (chines telecommunication company) இந்தியர்களை பணிநீக்கம் செய்யுமாறு வளைகுடா நாடுகளில் உள்ள அதன் கிளை நிறுவங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்..!

லட்சக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவருகின்றனர்.தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமல்லாமல் சீனாவை சேர்ந்த மற்ற நிறுவனக்களில் இருந்தும் இந்தியர்கள் சத்தமில்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் அடுத்தடுத்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எல்லைப்பிரச்சனயை மனதில் வைத்துக்கொண்டு சீனா நடத்தும் இந்த பொருளாதார தாக்குதல்களை சமாளிக்கமுடியாமல் வளைகுடா நாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் செய்வதறியாது புலம்பிவருகின்றனர்.

Related Posts: