வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

​நாடாளுமன்ற அவைக்கு பர்கா அணிந்து வந்து கழட்டிய பெண் உறுப்பினர் - அதிர்ந்த ஆஸ்திரேலிய அவை!



பர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்காக ஆஸ்திரேலிய செனட் அவைக்கு பெண் உறுப்பினர் ஒருவர் பர்கா அணிந்து வந்து அதை அவைக்குள்ளாகவே கழட்டியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிர வலதுசாரி உறுப்பினர் பௌலின் ஹான்சன். இவர் இசுலாமிய பெண்கள் உட்பட யாருமே பர்கா அணிந்து பொது இடத்திற்கு வரக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இப்பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று ஆஸ்திரேலிய செனட் அவைக்கு பர்கா அணிந்து வந்த அவர் செனட் அவைக்குள்ளாகவே அதை அவிழ்த்து உதறியிருக்கிறார். பின்னர் பேசிய அவர், “ இதை கழட்டி எரிவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இது இந்த நாடாளுமன்ற அவைக்குள் இருக்கக்கூடாது” என்று பேசியிருக்கிறார்.
பௌலின் இந்த நடவடிக்கையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, பேசிய ஆஸ்திரேலிய அட்டார்னி  ஜென்ரல் ஜியார்ஜ் ப்ராண்டிஸ் பர்கா அணிவது ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
Someone literally says 'What on earth?' as Pauline Hanson enters in what looks like a burqa  
மேலும், “ ஒரு சமுதாயத்தை துன்புறுத்த, ஒரு சமுதாயத்தை மூலையில் கொண்டு நிறுத்த, அதன் மத நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்க பௌலின் இப்படி செய்தார்” என்று கூறி பெண் உறுப்பினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டார்.