
பிரதமர் மோடி செவ்வாய் அன்று நடைபெற்ற இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவில் உரையாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்டு பேசிய சிலவற்றில் வரலாற்றுப்பூர்வமாகவும், நடைமுறையில் தகவல் பிழைகள் உள்ளன.
வளர்ச்சி:
வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி சரக்கு மற்றும் சேவை வரி மிகக்குறைந்த நாட்களிலேயே சாதித்துக்காட்டப்பட்டதைப் பார்த்து உலகம் ஆச்சரியப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவில் ஜி.எஸ்.டி கடந்த 17 வருடங்களாக ஆய்வு செய்யப்பட்ட விஷயம். பாஜகவி்ற்கு முன்னதாக இருந்த அரசுகள் இதற்காக தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளன.
சாலைகளின் வளர்ச்சி:
பிரதமர் மோடி பேசும்போது இன்றைய காலகட்டத்தில் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு வேகமாக சாலைகள் போடப்படுகின்றன என்று பேசினார்.
ஆனால், இது தவறு. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 2001லிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தில் 2012-13 காலகட்டத்தில் தான் அதிவேகமாக சாலைகள் போடப்பட்டுள்ளன. இதில் தேசிய, மாநில, ஊரக நெடுஞ்சாலைகள் அடக்கம்.
ரயில்வே:
மோடி பேசும்போது இன்று ரயில் வழிப்பாதைகள் இரட்டை வேகத்தில் உருவாக்கப்படுவதாக சொன்னார்.
ஆனால், இது தவறு 2009 முதல் இன்றுவரை அதிகமான ரயில் பாதைகல் உருவாக்கப்பட்டது 2011ம் ஆண்டுதான். 2011-12 காலகட்டத்தில் 3300 கி.மீ நீளத்திற்கு ரயில்பாதைகள் போடப்பட்டன. ஆனால், மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற 2014-16 வரை ஆண்டுக்கு 2400 கி.மீ ரயில் பாதைகள் போடப்பட்டுள்ளன. 2016-17 காலகட்டத்தில் 2800 கி.மீ பாதைகள் போடப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் சொல்வது போல் இரட்டை வேகத்தில் வேலைகள் நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றிருந்தால் 2014-16 காலகட்டத்தில் 2400 கி.மீ என்று இருந்த ரயில்பாதை பணிகள், 2016-17ல் 4800 ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்
சமையல் எரிவாயு:
நாட்டில் கூடுதலாக 2 கோடி பெண்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மோடி குறிப்பிட்டார்.
ஆனால், இது தவறான தகவல். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2.5 கோடி புதிய எரிவாயு இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களில் பல லட்சம் பேருக்கு சிலிண்டர் இணைப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:
மோடி பேசும்பொழுது, எந்தவிதமான உத்ரவாதமும் இல்லாமல் 8 கோடி வரை ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சுயவேலை வாய்ப்புக்காக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
ஆனால், இதுதவறான தகவலாகும். முந்த்ரா திட்டத்தின் கீழ், சிறுகுறு தொழில்களுக்காக 7.46 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களில் 40% பேருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியில் 2.5% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.