வியாழன், 17 ஆகஸ்ட், 2017

செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிக்கை August 17, 2017

செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிக்கை


ஸ்மார்ட் போன்களில் உள்ள பாதுகாப்புக் கூறுகள் தொடர்பாக ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் எழுத்து மூலம் விரிவான விளக்கம் அளிக்குமாறு செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைத் தகராறு நீடிக்கும் நிலையில் சீனப் பொருட்கள் இறக்குமதிக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்படும் கணினி, செல்பேசி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. வங்கி நடவடிக்கை, அரசின் நலத்திட்டங்கள், மக்களுக்கும் அரசுக்குமான தொடர்புகள் அனைத்தும் செல்பேசி வாயிலாக நடைபெறும் நிலையில் பயனாளர்களின் தகவல்கள் சீன நிறுவனங்களால் திருடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. 

இந்நிலையில் செல்பேசியில் பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்காக என்னென்ன முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது பற்றி வரும் 28ஆம் தேதிக்குள் எழுத்துமூலம் விரிவாக விளக்கம் அளிக்குமாறு 21 செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. ஆப்பிள், சாம்சங், பிளாக்பெரி உள்ளிட்ட நிறுவனங்களும், விவோ, ஆப்போ, சியோமி, ஜியோனி உள்ளிட்ட சீன நிறுவனங்களும் இதில் அடங்கும்.

Related Posts: