புதன், 30 நவம்பர், 2016

நாடா புயல் எச்சரிக்கை... தமிழகத்தின் 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நாடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் மற்றும் வானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்கள் தவிர வேறு எங்கெல்லாம் பணம் பெறலாம்?

மாத ஊதியத்தினை வங்கிக் கணக்கில் பெற்றவர்கள் ஏடிஎம் மையங்களுக்கு மாற்றாக எங்கெல்லாம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைக் காணலாம்.

ரூபாய் மதிப்பிழப்பு விவகாரத்தால் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மாத ஊதியம் பெறுபவர்கள் ஏடிஎம் மையங்களை நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஏடிஎம் மையங்கள் வாசலில் வரிசை மேலும் நீண்டுள்ளதை பல இடங்களில் காணமுடிகிறது. 
ஏடிஎம் மையங்கள் தவிர வங்கிக் கிளைகளுக்கு நேரடியாக சென்றும் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதுதவிர சில மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள.பிக்பஜார் வணிக வளாகங்கள் மற்றும் ஐனாக்ஸ் மால்களில் டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் மூலம் மக்கள், தங்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அதேபோல, மும்பையை சேர்ந்த மெட்ரோ, மோசி, கேட்வால்க், ஆசியாடிக், ரூபம், பென்சர், ரூப்மிலன், அமர்சான்ஸ், ரூப் சங்கம் போன்ற நிறுவனங்களும் இந்த சேவையை அளிக்க முன்வந்துள்ளன. இந்த சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் மாறாக வங்கிகள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 செலுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தினசரி வர்த்தகம் ரூ.2 லட்சத்தைத் தாண்டும் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பிஓஎஸ் இயந்திரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வசதியை மேலும் பல நிறுவனங்கள் வழங்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண நெருக்கடியால் சிரமம்படுபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஹைதராபாத் முஸ்லிம் வாலிபர்கள்.

பண நெருக்கடியால் சிரமம்படுபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் ஹைதராபாத் முஸ்லிம் வாலிபர்கள்.

தேச பக்தி

மாபெரும் முற்றுகை போராட்டம்

உலகில் ஏதாவது நடக்கப்போகுதோ?

இலட்சக்கணக்கான பறவைகள் வரலாற்றில்
முதல் முறையாக ஐக்கியஅரபு எமிரேட்ஸ்
ரஸ்-அல்ஹைமா பீச்சில் ஒன்று சேர்ந்துள்ளன.
காரணம் தெரியவில்லை.
உலகில் ஏதாவது நடக்கப்போகுதோ?

இந்த செய்தியை விபச்சார & பாசிச மீடியாவால் திட்ட மிட்டு மறைக்கபட்டு உள்ளது...

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அப்துல் கபார் கொல்லப்பட்டுள்ளார்...
இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன் ...
இந்த செய்தியை விபச்சார & பாசிச மீடியாவால் திட்ட மிட்டு மறைக்கபட்டு உள்ளது...



இது மோடி அரசு

அச்சத்தில் இளைஞர் சமூகம்

கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ??

கைது செய்த உடனேயே தீவிரவாதிகள் தான் என்று எப்படி ஊடகங்களால் அத்தனை உறுதியாக சொல்ல முடியும் ?? விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் எல்லாமே தீவிரவாதிகள் அதுவும் இஸ்லாமியர்கள் என்றால் 100% அக்மார்க் தீவிரவாதிகள் என்று மட்டுமே ஏன் பதிவு செய்கின்றனர். இதையே பொது புத்தியில் ஏற்றிக் கொண்டு, அக்கம் பக்கம் இருக்கும் தாடி வைத்து குல்லா போடுபவன் எவனைப் பார்த்தாலும் சந்தேகத்தோடுப் பார்க்க வைப்பதே நீங்கள் செய்யும் சாதனை. எப்படியும் ஓரிரு தினங்களில் அப்படி எந்த குற்றத்திலும் தொடர்புடையவர்கள் இல்லை என்று ஏதோ ஓர் மூலையில் கிசு கிசு போல் எழுத போகிறீர்கள். அவர்கள் படத்தைப் பேப்பர், டிவி என்று பார்த்த அனைவரும் இனி அவனை சந்தேகத்துடனே பார்ப்பார்கள். அவன் வீட்டில் பெண் எடுக்க, பெண் கொடுக்க, வேலைக்குப் போக இன்னும் எவ்வளவோ இருக்கு.. இதில் எல்லாம் போற போக்குல மண் அள்ளிப் போட அசாத்திய அறிவின்மை வேணும். அது இப்போ நிறைய பேருக்கு இருக்கு. இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கும் சேர்ந்து போராடினால் நன்று.
பிரியாணி செய்றவன் எல்லாம் தீவிரவாதின்னா அதைத் திருடி தின்ன நீங்க யாருடா...
FB Subha D

பெற்றோர் சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டில் மகன் உரிமை கோர முடியாது....டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

பெற்றோர் தன் சுய சம்பாதியத்தில் வாங்கிய வீட்டில், அவர்கள் விரும்பாவிட்டால் மகன் சட்டரீதியாக உரிமை கொண்டாட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் தனது வீட்டில் இருந்து மகன் மற்றும் மருமகள் காலி செய்ய மறுப்பதை எதிர்த்து பெற்றோர் சார்பில் கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மகன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தங்கள் வீட்டில் வசிக்கும் மகன் மற்றும் மருமகள், மூத்த குடிமக்களான தங்களது வாழ்க்கையை நரகமாக்கி விட்டதாகவும், எனவே, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது. பெற்றோரின் வீட்டில் வசிக்க மகனுக்கு உரிமை இருப்பதாக மகன் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுய ச‌ம்பாதியத்தில் பெற்றோர் வாங்கிய வீட்டில், அவர்கள் விரும்பும் வரை மட்டுமே மகன் வசிக்க முடியும் என்றும் பெற்றோர் விரும்பாத நிலையில், சட்டரீதியாக வீட்டில் வசிக்க மகனுக்கு உரிமையில்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை இனி உங்கள் ஊரில் இருந்தபடியே வானில் பார்க்கலாம்

பல நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், சிம்லாவில் புலப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமியில் இருந்து அனைவரும் பார்க்கமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.
சிம்லாவில் புலப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம்:
சர்வதேச விண்வெளி நிலையம், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீட்டர் தொலையில், விநாடிக்கு 7.6 கி.மீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு நாடுகளின் விண்வெளி வீரர்கள், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை நான்கு நிமிடங்கள் காணலாம்:
இந்நிலையில் விண்வெளியில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தை, இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவைச் சேர்ந்த ஒருவர் வானில் பார்த்தது மட்டும் இல்லாமல், அதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிம்லாவில் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி மாலை 6:27 மணிக்கு புலப்பட்டது.
இது ஒன்றும் அதிசயம் இல்லை சர்வதேச விண்வெளி நிலையத்தை பொதுவாக ஒரு நிமிடம் முதல் நான்கு நிமிடங்கள் வரை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் வேகமாக நகரும் விமானம் போல் இந்த காட்சிகள் புலப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விண்வெளி நிலையத்தை காண புதிய இணையதளம்:
சர்வதேச விண்வெளி நிலையம் நீங்கள் வசிக்கும் பகுதியை எப்போது கடந்து செல்லும் என்பதை தெரிவிப்பதற்காக https://spotthestation.nasa.gov/home.cfmஎன்ற இணையதளத்தை நாசா உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் சென்று நீங்கள் இருக்கும் பகுதியை குறிப்பிட்டால், அந்த பகுதியை எப்போது விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்து செல்லும் என்ற தகவல்கள் அளிக்கப்படும். இதனை கணக்கில் கொண்டு நீங்கள் வெறும் கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையம், ஒரு நட்சத்திரம் போல் உங்கள் பகுதியில் கடந்து செல்வதை பார்க்க முடியும். மேலும் இந்த இணையதளம் வழியாக, உங்கள் பகுதியை எப்போது சர்வதேச விண்வெளி மையம் கடந்து செல்லும் என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்கான வசதியும் உண்டு.

My proposal to PM


செவ்வாய், 29 நவம்பர், 2016

ஆடு வளர்த்தவரின் அனுபவம்

ஆடு வளர்த்தவரின் அனுபவம்
என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
விற்பனை வழிமுறைகள்: நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.
மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
* பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
* உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
* நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம்.
தொடர்புக்கு: ஐ.நாசர்,
கோயம்புத்தூர். 99943 82106.
-கே.சத்தியபிரபா, உடுமலை

நாம் வைத்து இருக்கும் பணத்துக்கு எத்தனை முறை வரி ?

கறுப்பு பணம் என்றால் என்ன?
யாரிடம் கறுப்பு பணம் இருக்கிறது?
நாம் வைத்து இருக்கும் பணத்துக்கு எத்தனை முறை வரி ?

ஊடக தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்

பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஜனநாயக ரீதியில் மாவட்டங்கள் தோறும் ஒன்று கூடிய போதிலும் அதைபற்றி வாய் திறக்காத ஊடகங்கள்.........
விசாரணைக்காக இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறை கைது செய்ததும் தீவிரவாதிகள் பயங்கரவாிகள் அல்கொய்தா தாலீபான் என்று கொக்கரிக்க வந்துவிட்டனர்........
நம்மை இந்த சமூகத்தில் எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என்று அவன் முயள்கின்றான் பாருங்கள்.........
விபச்சார ஊடகங்கள் என்பதில் தவறே இல்லை......

விளம்பர செலவா ?

அடிக்கும் போலீஸ் திருப்பி அடிக்கும் தோழர்கள்!

மக்களின் சொந்த பணத்தை கள்ளப்பணமாக அறிவித்த மோடி அரசை கண்டித்து CPM போராட்டம்.
அடிக்கும் போலீஸ் திருப்பி அடிக்கும் தோழர்கள்!

விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்

Published: November 27, 2016 12:00 .
விவசாய விளைபொருட்கள் ஆன்லைனில் விற்பனை: 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிமுகம்
எஸ்.நீலவண்ணன்.
மற்ற தொழில்களில் உற்பத்தி செய்பவர்களே விலையை நிர்ணயிக்கும்போது, விவசாயிகள் மட்டும் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய முடியாத அவலம் நீடிக்கிறது. வேளாண் உற்பத்தியில் வணிகர்களும், இடைத்தரகர்களுமே லாபம் பெறுகின்றனர். இது ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் துயரம்.
விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைக்க வேளாண் விளைபொருட்களை ஆன்லைன் மூலம் விற்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ‘ஈ-நம்’ (e.nam) என்ற பெயரில் தேசிய வேளாண் சந்தை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு தேவை எங்குள் ளது, இந்தத் தேவை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் விவசாயி களும், வியாபாரிகளும் இணைந் திருப்பார்கள். இதில் இடைத்தர கர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
கட்டுப்படியான விலையைக் கொடுக்க தயாராக இருக்கும் வியாபாரியும், விவசாயியும் ஒரே நேர்கோட்டில் வந்து விளை பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும். இந்திய அளவில் தமிழ் நாடு உட்பட 15 மாநிலங்களில் இந் தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங் களைத் தருகிறார் விழுப்புரம் வேளாண் விற்பனைக்குழு செய லாளர் சங்கர்:
‘இ.நம்' (Electronic. National agriculture market) என்ற திட்டத்துக்கு தமிழகத்தில் 100 ஒழுங்குமுறை விறபனைக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் கொண்டுவரும் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தரம் பிரித்து முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பட்டியலிட்டு இணையத்தில் பதிவு செய்யும். இந்தத் தரம் பிரித்தலுக்கு அந்தந்த வேளாண் விற்பனைக்குழுவே பொறுப்பு. இதுகுறித்து விவரங்களை www.enam.gov.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம்.
இதுதவிர, 'மொபைலில் நெட் பேங்கிங் ஆப்' போலவே மொபைல் மூலமே தங்கள் வேளாண் பொருட் களை விற்பனை செய்யவும், பொருட்களை வாங்கும் வகை யிலும் புதிய வேளாண் விற்பனை அப்ளிகேஷன் ஒன்றை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தேவையுள்ள வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டு நல்ல விலைக்கு தங்கள் பொருட்களை விற்கமுடியும். இதற் காக, ‘இண்டர்லிங்க் ஆஃப் ரெகுலேட்டர் மார்க்கெட்' என்ற முறையில் தமிழகத்தில் 15 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்படுகின்றன.
இந்த முறையை மிகச்சிறிய குறு விவசாயிகளும் பயன்படுத்த தமிழ்நாட்டில் உள்ள மின்னணு ஆளுமை சேவை (இ சேவை மையங்கள்) இயங்கவிருக்கின்றன. அவைகள் விவசாயிகளுக்கு வழிகாட்ட இருக்கிறது. இதற்கான பயிற்சிகளும் விரைவில் விவசாயி களுக்கு அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள மாவட் டங்களான விழுப்புரத்தில் 5, திரு வண்ணாமலை, ஈரோடு, கடலூரில் தலா 2, திருப்பூர், தூத்துக்குடி, கோவை, நாமக்கல் தலா 1 என 15 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் எந்த மாவட்டங்களில் எந்த விளை பொருட்கள் வரத்து அதிகம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி - மணிலா பயறு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி - எள், விக்கிரவாண்டி, விழுப்புரம், அவலூர்பேட்டை, செஞ்சி - மணிலா பயறு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை - மஞ்சள், கோவை மாவட்டம் ஆனைமலை - கொப்பரை, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் - கொப்பரை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - மஞ்சள், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - மிளகாய் என கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கான கட்டுமான வசதிகள் செய்துகொள்ள ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் ரூ 30 லட்சம் மத்திய அரசு நிதி அளிக்கிறது. இந்த சேவை விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவித்தார்.

ஐயா யார் தெரியிதுங்களா.....

ஐயா யார் தெரியிதுங்களா.....
நேற்று இந்த தேசபக்தரிடம் இருந்து தான் 20லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.....

BJP ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்


“திரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக்கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன் !! என்னை குறை சொல்வது மல்லக்காய் படுத்து எச்சல் துப்பிக் கொள்வதற்கு சமம்.”
இதை சொன்னது வேறு யாரும் அல்ல பா.ஜ.க-வின் தலைவரும் நடிகருமான எஸ்.வி சேகர். ஒரு பா.ஜ.க தலைவரே மற்றொரு தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். அதன் பொருட்டு இந்த முன்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.
எஸ்.வி.சேகருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு
பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பதவியில் இருப்பவர் இந்த கே.டி.ராகவன். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். சுமந்த் சி ராமன், மாத்ருபூதம், பெருமாள் மணி, பானு கோம்ஸ் போன்ற அரசியல் விமர்சகர் என்ற முகமுடியுடன் வரும் அதிகாரப்பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பேச்சாளர்களுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. வின் சொந்த முகத்துடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.
சென்ற 2015-ம் ஆண்டு தாலி பற்றிய விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்து வானரங்கள் குண்டு வீசிய விவகாரத்தில் புதிய தலைமுறையின் விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற ’கொள்கை’ முடிவெடுத்திருந்தனர் தமிழக பா.ஜ.க. வினர். இந்தப் பங்காளிச் சண்டையை அடுத்து சில நாட்கள் அவர்கள் பு.தலைமுறை விவாதத்திற்கு செல்லாமல் இருந்த போது எஸ்.வி.சேகரோ அந்த முடிவை மீறி விவாதங்களில் பங்கெடுக்கிறார்.
மோடியை நேரடியாகவே சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கோடு இருக்கும் தான் கட்சி முடிவுகளை பின்பற்றத் தேவையில்லை என்ற ’தன்னடக்கம்’ தான் அவருடைய கலகத்திற்கு காரணம். மேலும் காங்கிரசு போன்று கோஷ்டி மோதலுக்கும், கோஷ்டி கழுத்தறுப்புக்கும் பா.ஜ.க-வும் பெயர் பெற்றதுதான். தமிழகத்தில் அப்படி சில பல கோஷ்டிகள் செயல்படுகின்றனர். ஃபேஸ்புக்கில் கொஞ்சம் இவர்கள் உலகில் நுழைந்து பார்த்தால் காவி வேட்டி கிழிந்து சண்டையிடும் பல்வேறு தர்ம யுத்தங்களைப் பார்க்கலாம்.
இந்த இலட்சணத்தில் அ.தி.மு.கவில் குப்பை கொட்ட முடியாமல் இங்கே நுழைகிறார் எஸ்.வி.சேகர். அவரை மற்ற கோஷ்டி தலைவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை, மரியாதை தரவில்லை என்ற குறையோடுதான் அவர் புதிய தலைமுறை விவாதத்தில் முடிவை மீறி கலந்து கொள்கிறார்.
அப்படி விவாதத்தில் கலந்து கொண்டாலும், பா.ஜ.க. வின் ‘அர்ரம் குர்ரம்’ விவாத முறைக்கும் மக்கள் விரோத கருத்துக்கும் மாறாக எதையும் பேசிவிடப் போவதில்லை என்றாலும், கட்சியின் சில தலைவர்களுக்கு எஸ்.வி.சேகரின் ’தன்னடக்கத்தால்’ எரிச்சல் ஏற்படுகிறது. கே.டி.ராகவன் போன்றோர் கட்சிக்கு ’புதிதாக’ வந்த எஸ்.வி.சேகரை விமர்சிக்கின்றனர். கட்சிக்குள் புகைச்சலும் உள்குத்து சண்டையும் ஆரம்பிக்கிறது.
இதையடுத்து சென்ற 2015, ஜூன் மாதம் பா.ஜ.க-வின் கே.டி.ராகவனுக்கும் எஸ்.வி சேகருக்கும் இடையில் நடந்த சண்டை வலுத்து எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து தான் மேற்சொன்னது. இதில் கே.டி ராகவனுடைய சகோதரர் கே.டி சீனிவாசனது ஊழலை பிட்டு வைக்கிறார் எஸ்.வி.சேகர்.
எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பதிவில் பதில் போடும் கே.டி.ராகவன்.
இதற்கு அதே பதிவில் பதிலளித்த கே.டி.ராகவன் “திரு, சேகர்.. வணக்கம். நீங்கள் பதிவிட்ட இந்த நிறுவனத்தில் என்னுடைய சகோதரர் சில இயக்குனரில் ஒரு இயக்குனராகவும் வேலை செய்தார் என்பது உண்மை… இயக்குனர் பொறுப்பிலிருந்து அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார் என்பது உண்மை.. அந்த நிறுவனம் இப்போது நீதி மன்ற உத்திரவு படி மூட பட்டிருப்பதும் உண்மை.. அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார் என்பதும் உண்மை. அது அவருடைய சொந்த நிறுவனம் அல்ல என்பதும் உண்மை. ஆனால் இதிலே என்னுடைய பெயரை இழுக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா? உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
கே.டி. ராகவனின் சகோதரர் கே.டி சீனிவாசன் இயக்குனராக இருக்கும் நிறுவனத்தின் பெயர் ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்’ (EDserve Soft systems). ஒரு நிறுவனத்தில் இயக்குனராக யார் இருப்பார்கள், இருக்க முடியும்? உதாரணமாக, தி ஹிந்து இதழின் உடைமையாளர்களான கஸ்தூரி அன் சன்சில் யார் இயக்குனராக முடியும்? திருமாவளவனோ, கிருஷ்னாசாமியோ இயக்குனராக முடியுமா? கஸ்தூரி அய்யங்காரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் தான் இயக்குனராக முடியும்.
அடுத்ததாக, ”அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார்” என்கிறார். பின்னர் ”அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார்” என்கிறார். ஒரு நிறுவனத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தவர், எப்படி அந்நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழக்க முடியும்? ராஜினாமா செய்தபின் அவருடைய ஆல்டர் பெர்சனாலிடி அந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
ராகவன் ஒரு யோக்கியராக இருந்தால் தனது சகோதரரது ஊழலைக் கண்டித்து அவரை குடும்ப நீக்கம் செய்திருக்க வேண்டும். போலீசிடமும் புகார் அளித்து ரெய்டு நடத்த உதவியிருக்க வேண்டும். அடுத்து நடிகர் சேகர் குற்றச்சாட்டு சொன்னவுடன் ஆஜராகும் அவர் தனது பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என்று சகோதரரது குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். பிறகு சகோதரர் ராஜினாமா செய்தார், கருத்து வேறுபாட்டால் நீங்கினார், நீதிமன்றத்தால் மூடப்பட்ட பிறகு வேலையிழந்தார் என்று முன்னுக்குப் பின் முரணாக ஒரு பதிவிலேயே உளறுகிறார். குற்றம் செய்பவனுக்கு குளறுபடி இல்லாமல் பேச வராது என்பது இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ராகவன் தனது சகோதரர் கே.டி சீனாவாசனது அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.
சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராகவன், ரூ. 81 இலட்சத்தை தனது சொத்துக் கணக்காக காட்டியிருக்கிறார். எனில் இவருடைய நிரந்தர வருமானம் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் உளருவது போல உளறும் இவர் வழக்குரைஞர் தொழிலும் செய்கிறாராம். என்ன வழக்குரைஞரோ?
ராகவனது சகோதரர் சீனிவாசன் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாக அவரது தொழில்சார் சமூகவலை தளமான லின்க்ட் இன் (Linkekd in) சுயவிவரத்தில் இன்று வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு மாம்பலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக 2001-ம் ஆண்டு துவங்கப்பட்ட லேம்பெண்ட் சாஃப்ட் சிஸ்டம்ஸ் (Lambent Soft systems ), 2008-ம் ஆண்டு ஆன்லைன் கல்வி சேவையை வழங்கும் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்-ஆக மாற்றப்படுகிறது. 2007- 2008 நிதியாண்டில் 3.95 கோடி வருமானத்தை ஈட்டிய எட்செர்வ் நிறுவனம், பிப்ரவரி 2009-இல் ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,973,908 பங்குகளை ரூ. 55-லிருந்து ரூ.60-தை ஆரம்ப விலையாக நிர்ணயித்து பங்குச்சந்தையில் வெளியிட்டது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு(FII) 18,86,954 பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனமல்லா முதலீட்டாளர்களுக்கு (Non institutional Investors-NII) 5,66,086 பங்குகளையும், சாதாரண மக்களுக்கு 13,20,868 பங்குகளையும் ஒதுக்கீடு செய்திருந்தது எட்செர்வ். பங்கு வெளியிட்ட மூன்றாவது நாளே எல்லா பங்குகளும் விற்று, 1.3 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதிலும், நிறுவனமல்லா முதலீட்டாளர் பங்குகளில் 3.1 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. மேற்கு மாம்பலத்தின் அய்யங்கார் நிறுவனம் எப்போது தனது பங்குகளை சந்தையில் வெளியிடுமென்று ’சர்வதேச முதலீட்டாளர்கள்’ காத்திருந்தனர் போலும்.
சீனிவாசன் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாக அவரது தொழில்சார் சமூகவலை தளமான லின்க்ட் இன் (Linkekd in) சுயவிவரத்தில் இன்று வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக பங்குச் சந்தைக்குச் செல்வது சாதாரண பொதுமக்களின் முதலீடுகளை பெறுவதற்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்களின் முதலீடுகளை விட கருப்புப் பண முதலைகளின் பினாமி நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இவற்றின் முதலீடுகள் தான் மிக அதிகம். அதாவது கருப்பை வெள்ளையாக்கும் நடைமுறைகளில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்றாகும்.
இதன் மூலம் பங்குச் சந்தையில் மூலம் சுமார் ரூ 23.84 கோடி அளவுக்கு நிதி திரட்டியது எட்செர்வ். இம்முதலீடுகள் யாரிடமிருந்து வந்தன என்பதை செபி, அமலாக்கப் பிரிவு என யாருக்கும் சொல்லத் தேவையில்லை. நிறுவனமல்லா முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) பதிவுசெய்திருக்க வேண்டியதில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்திருந்தாலும், அந்த நிறுவனங்களில் யார் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இப்பேற்பட்ட யோக்கியர்தான் இன்று தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்திற்கு ஆதரவாக நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறார். உண்மையில் இவர்கள் கொள்ளையடிப்பதற்கான குற்றத்திற்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமாம்.
இதன் பிறகு வரிசையாக செப். 2009-ல் 2tion.comநிறுவனத்தையும், பிப்ரவரி 2010-ல் ரூ. 4 கோடிக்கு SchoolMate, மார்ச் 2010-ல் ரூ. 4.6 கோடிக்கு SmartLearn WebTV, ரூ.1.25 கோடிக்கு Sparkling Mind, போன்ற கல்வி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியது.
2010-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத் அரசின் தொழில் முனைவு மேம்பாட்டு மையம், குஜராத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து குஜராத் இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் பெற்றது. அதாவது குஜராத்தின் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கி, அவர்களுக்கு குஜராத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேலையும் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை தான் எஸ்.வி சேகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு குஜராத் அரசு எந்த ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பையும் (Tender Invitation) வெளியிட்டதாக தெரியவில்லை. எனில், குஜராத் அரசின் ஒப்பந்தம் மேற்கு மாம்பலத்திலுள்ள ஒரு அய்யங்கார் கம்பெனிக்கு எப்படி வந்தது?
மோடி – பா.ஜ.க – ராகவன் – சீனிவாசன் – எட்செர்வ் நிறுவனம் என்ற வழித்தடமின்றி வெறென்ன இருக்கமுடியும். முன்னதாக 2009-இல் வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடமிருந்து பெற்றிருந்தது. பா.ஜ.க. வும் காங்கிரசும் தொழில் பங்காளிகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
பஞ்சாப் நேஷனல் வங்கி, இத்தாலியை சார்ந்த Banca IFIS மற்றும் இத்தாலிக்கு தெற்கிலுள்ள மால்டாவைச் சேர்ந்த கடன் நிறுவனமான – எஃப்ஐஎம் வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்தியா ஃபேக்டரிங் (India Factoring and Finance Solutions) நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் ரூ. 5 கோடியில் ரூ. 1.16 கோடியை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் மோசடி செய்தது. ரூ. 5 கோடிக்கே இத்தாலி, மால்டா ஆகிய இரு வெளிநாட்டு முதலீட்டு வங்கிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்றால் கருப்புப் பணத்தின் பாய்ச்சலை புரிந்து கொள்ளலாம்.

இந்த புள்ளயும் பால் குடிக்குமாங்குற மாதிரி என்னா ஒரு நடிப்பு!
இதற்காக இந்தியா ஃபேக்டரிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை மூடியும், அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து அதன் சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட செப், 2013-ல் தீர்ப்பளித்தது, உயர் நீதிமன்றம்.
இந்த நிறுவனமும் அதன் இயக்குனர்களும் செபியின் மோசடி மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தடை விதிகள் மற்றும், மூலதன மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் நெறிகளுக்கு முரணாக பெரு நிறுவனங்களுக்கிடையிலான வைப்பு திட்டங்கள் (Deposit schemes) மற்றும் பல திரைமறைவு பரிவர்த்தனைகளின் மூலம் பங்கு விற்பனை – முதலீடு திரட்டியதை செபி (SEBI) கண்டறிந்தது.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபி (SEBI) எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தையும் அதன் நிர்வாக இயக்குனர் கிரிதரன் மற்றும் மூன்று இயக்குனர்களையும் பங்கு சந்தையிலிருந்து மூன்றாண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த பங்குச் சந்தை முறைகேடுகள் நடந்தது 2009-ல் அதாவது, 2013-ல் நிறுவனம் நீதிமன்றத்தால் முடக்கப்படும் முன்னர் நடந்தது.
எட்செர்வ் தன்னுடைய சகோதரரது சொந்த நிறுவனம் அல்ல என்றும் ராகவன் தனது பதிலில் சொல்கிறார். அதாவது, அந்நிறுவனம் செய்த முறைகேடுகளுக்கு தனது சகோதரர் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது என்கிறார். இயக்குனராக இருப்பவர்கள் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களாகவும் பங்குள்ளவராகவும் தானே இருப்பார்கள்? இம்முறைகேடுகள் நடந்த போதும், அரசின் ஒப்பந்தங்களைப் பெற்ற போதும் கே.டி.ராகவனின் சகோதரர் கே.டி.சீனிவாசன் அந்நிறுவனத்தின் இயக்குனராக தான் இருந்திருக்கிறார். பின்னர் நீதிமன்றம் மூடுமாறு உத்திரவிடும் போதுதான் அவர் பதவி விலகியதாக யோக்கியர் ராகவனே கூறுகிறார்.
தன்னுடைய சகோதரருக்காக வழக்குரைஞராகி வழக்காடிய ராகவன், பிறகு, ”உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்” என்றும் கேட்கிறார். ராகவனுக்கும், சகோதரரின் தொழிலுக்கும் தொடர்பில்லை எனில் அதை முதலிலேயே சொல்லி விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே, எதற்காக அவருக்காக வாதாட வேண்டும்? இதுவே ராகவனுக்கும் சகோதரர் சீனிவாசனின் தொழிலுக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துகிறது. ராகவன் தனது சகோதரரின் அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.

2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மாபாரும் மக்கள் ‘திரளிடையே’ பிரச்சாரம் செய்கிறார் கே.டி.ராகவன்.
வெளிவந்தது ஒரு நிறுவனமும், சிறு துளியும் தான். எஸ்.வி சேகரின் அந்தப் பதிவிலேயே சில பா.ஜ.கவினர் இரு ‘தலைவர்களுக்கும்’ சமாதானம் செய்துவைத்து தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது கட்சித் தலைகள் விட்டுவிடுவார்களா? அதுவும் இல.கணேசனின் ஆதரவு பெற்ற ஆர்.எஸ்.எஸ் அய்யங்கார் குடும்பத்தை விட்டுவிடுவார்களா? விசயம் அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.
கர்நாடகா ரெட்டி சகோதரர்கள் – எட்டியூரப்பா – லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, அதானி, அம்பானிக்கு உதவும் மோடி, வியாபம் ஊழல் புகழ் சிவராஜ் சிங் சவுகான் என்று தொடரும் வரிசையில் இன்னும் எத்தனை பா.ஜ.க. வினர் இருக்கிறார்கள் என்பதை எஸ்.வி.சேகர் போன்ற கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.
ராகவன் போன்ற இத்தகைய பா.ஜ.க கேடிகள் தான் கருப்புப் பணத்தைப் பற்றி தொலைக்காட்சி விவாதங்களில் மூச்சு முட்ட கதறுகின்றனர் என்றால், மோடியின் கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் யோக்கியதையை அறிந்து கொள்ளுங்கள்.
வினவு புலனாய்வு செய்தியாளர் குழு.



எவ்விதமான தலைவலியும் குறையும்.

தேவையான பொருட்கள்:
மிளகாய்- 200 கிராம்
மிளகு – 100 கிராம்
பால் – 1/2 லிட்டர்
நல்லெண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை:
மிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
எவ்விதமான தலைவலியும் குறையும்.

இன்று வரை இயல்பை விட 71% மழை குறைவாக பதிவாகியுள்ளது.

நடப்பாண்டில் அக்.1 முதல் இன்று வரை இயல்பை விட 71% மழை குறைவாக பதிவாகியுள்ளது.
சராசரியாக 32 செமீ பெய்ய வேண்டிய மழை இந்த ஆண்டு 10 செமீ மழையே பொழிந்தது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

500, 1000 நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பின் நேற்று வரை...


வங்கிகளில் டெபாசிட் - ரூ.8,11,033 கோடி
பணமாற்றம் - ரூ. 33,948 கோடி
பணம் எடுத்தது: ரூ 2,16,617 கோடி
ரிசர்வ் வங்கி தகவல்

பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்திய அபிஷேக் கைது !

மோடி அரசின் பண மதிப்பிழப்பு(demonetization) நடவடிக்கையை விமர்சித்து பதிவிட்டதற்காக மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது மத்திய பிரதேச பா.ஜ.க அரசு. அபிஷேக் மிஸ்ரா என்ற அந்த 19 வயது மாணவர் மத்தியபிரதேச மாநிலம் சத்தர்ப்பூரைச் சேர்ந்தவர்.
அபிஷேக் மிஸ்ரா
பல சமூக பொருளாதார விசயங்களைக் குறித்து தனது வலைதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் அபிஷேக். மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் அபிஷேக். அவரது யூடியூப் தளம் சுமார் 85,000-த்திற்கும் மேற்பட்டோரால் பின் தொடரப்படுகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபிறகு மக்கள் பணமில்லாமல் தவித்தவேளையில் மத்தியபிரதேச பா.ஜ.க தலைவர் ஒருவரின் காரிலிருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியிருக்கிறது. அது குறித்து தனது கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார் மாணவர் அபிஷேக்.
இப்பின்னணியில்தான் கடந்த 11.11.2016-ம் தேதி மத்தியபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார் இம்மாணவர். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 469 (நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66C (மற்றவர்களது ஆன்லைன் அடையாளத்தை முறைகேடாக பயன்படுத்தியது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவரது சமூக வலைதள பதிவுகளை நீக்கியுள்ளது அரசு.
இக்கைது குறித்து போபால் நகர சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிகாந்த் தேகரியா கூறுகையில் “அபிஷேக் ஒரு வலைதளத்தை நடத்துகிறார். முதலமைச்சர் மற்றும் பிற முக்கியமான மரியாதைக்குரியவர்களை அவமதிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவரை கைது செய்துள்ளதோடு அவரது வலைதளத்தை முடக்கியுள்ளோம். அவரது முகநூல் பதிவுகளையும் நீக்கியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவரின் வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா கூறுகையில், “ பா.ஜ.க தலைவர் ஒருவரின் காரிலிருந்து பணம் கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாகியிருந்த நாளிதழ் செய்தியை பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் மாணவர் அபிஷேக். சம்பந்தப்பட்ட பா.ஜ.க தலைவருக்கு பதிலாக முதல்வர் சவுகானின் புகைப்படத்தை பயன்படுத்தியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்கிறார்.
இதே போன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து பதிவிடுவது கிரிமினல் குற்றம் என அரசியல் சட்டம் 144-ஐ பயன்படுத்தி அறிவித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில இந்தூர் மாவட்ட ஆட்சியர். கடந்த நவமபர் 14-அன்று அவர் வெளியிட்டுள்ள அரசு குறிப்பில் “மோடி அரசின் ரூ.500,ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களிலோ, குறுஞ்செய்திகளிலோ அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பதிவிடுவது கிரிமினல் குற்றம்” என அறிவித்திருக்கிறார்.
இதுபோன்ற ஆட்சேபத்திற்குரிய பதிவுகளினால் பொதுசொத்துக்கும், உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது இவ்வறிவிப்பு. மேலும் “இது போன்ற பதிவுகளால் வரும் நாட்களில் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் இது தடைவிதிப்பது அவசியமாகிறது” என்கிறது ஆட்சியரின் உத்தரவு.
இவ்வுத்தரவு 2017-ஜனவரி வரை பொருந்தும் என்றும் இதை மீறுவோர் ஒரு மாதம் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
பால் தாக்கரேவை விமர்சனம் செய்ததற்காக மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களுக்கு பிறகு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A –ஐ செல்லாது என்று 2015-மார்ச் மாதம் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆயினும் அதற்கு பிறகும் இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதும் சிறையில் அடைப்பதும் தொடர்ந்து வருகிறது. தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரப்படி 2015-ம் ஆண்டு மட்டும் 4154 புதிய வழக்குகளும், 3137 கைதுகளும் இச்சட்டபடி நடந்திருக்கிறது.
தற்போதைய கைதுகளும் அறிவிப்புகளும் 66A என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களில் ஆனால் அதே ஆள்தூக்கி சட்டத்தை அமல்படுத்தப்பட்டு வருவதைதான் காட்டுகிறது.
டி.வி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் பொதுமக்கள் மோடியை ஆதரிப்பதாகவும், மோடி நடத்திய கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் வரவேற்றார்கள் எனவும் பேசுகிறார்கள். அரசும் இதைதான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறது. ஆனால் இந்த அரசு மக்களை கண்டு எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இக்கைதுகளும் அறிவிப்புக்களுமே சான்று.

மின்சாரம் 99.9%

இரக்கமற்ற கொள்ளைக்கூட்டம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்திற்கு வருகிறது மத்திய பாஜக அரசின் 12.36 % சேவை வரி …!

வெளிநாடுகளில் வேலை செய்யும்
நண்பர்கள் கவனத்திற்கு :
நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது ..
அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி .
அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,
ரூ . 100 க்கு – ரூ .12.36.
ரூ. 1000 க்கு – ரூ . 126.36
ரூ. 10000 க்கு – ரூ. 1236.
ரூ. 100000 க்கு – ரூ. 12360.
சேவை வரியாக செலுத்த வேண்டும் ..
நம்ம அரசாங்கம் நமக்கு எந்த சேவை பண்ணி கிளிச்சானுங்கனு இந்த சேவை வரி கேக்குரானுங்கனு .தெரியல.
வெளிநாடுகளில் சம்பாதிக்க வரும் அனைவருமே தன்னுடைய குடும்ப தேவைகளுக்கு தான் இங்கு வருகிறோம்.
அதுவும் கூலி வேலை செய்யும் சகோதரர்கள் எவ்வளவு பாதிக்க படுவார்கள்.
நாம் இங்கிருந்து அனுப்பும் பணத்திற்கு நாம் ஏற்கனவே இங்கு சேவை வரியாக 14 முதல் 20 ரியால் , திர்ஹம் கொடுக்கிறோம் .
இந்த சேவை வரி மூலம் நமது அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கு 350 முதல் 400 கோடி வரை கிடைக்கிறது .. இருந்தாலும் நமது அரசாங்கம் இது போதவில்லை இவர்களிடம் இருந்து மேலும் பிடுங்கவேண்டும் இந்த சேவை வரி திட்டத்தை அமல் படுத்தி உள்ளது.
இவர்களுக்கு சுவிஸ் வங்கியில் லட்ச கோடி கணக்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க வக்கில்லை .. வெளிநாடுகளில் இருந்து மாதம் 5000 , 10000 அனுப்பும் நபர்களிடம் இருந்து சேவை வரியாக பிச்சை கேட்கிறார்கள்.
#இதை_அதிகமாக_ஷேர்_பண்ணுங்கள்..
இதை பற்றி இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் …
அனைவரும் ஒன்றினைந்து இந்த சேவை வரியை நீக்குவோம்..

சகோதரியின் குமுறல்

வங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்ப‌ற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது.
அதன்படி, இன்று முதல் தற்போது அமலில் இருக்கும் உச்சவரம்பைக் காட்டிலும் (ஒரு வாரத்திற்கு ரூ.24,000) அதிகமாக பணம் எடுக்க முடியும். அவ்வாறு அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச மதிப்பு கொண்ட புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Only one God -Rigveda

கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்..ரேடாரில் பதிவான மனதை பதற வைக்கும் காட்சிகள்..!

பிரேசிலின் கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்துகுள்ளானது ரேடாரில் பதிவாகியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் உள்பட 81 பேர் பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 
விபத்து நடந்த இடத்தில் இருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விமானங்களின் செயல்பாட்டை அனைத்து நாட்டு விமான துறைகளுமே ரேடார் மூலம் கண்காணிப்பது வழக்கம். அதேபோல, பிரேசில் வீரர்கள் பயணம் செய்த விமானம் ரேடாரில் பதிவாகயிருக்கும். 
விமானமானது கொலம்பியா வான் எல்லைக்குள் வந்ததும் அந்த நாட்டு ரேடார்களால் பதிவாகியிருக்கும். கொலம்பியா எல்லைக்குள் விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த தருணம், ரேடாரில் பதிவாகியுள்ளது.

கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் அடுத்த நகர்வு

கறுப்பு பண ஒழிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்திற்கு வரி விதிப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.
கறுப்புப் பணத்துக்கு கடிவாளம் போடக்கூடிய இம்மசோதாவின் முக்கிய அம்சங்கள்:.
இம்மசோதாவின்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 30 சதவிகித வரியும் 10 சதவீத அபராதமும் விதிக்கப்படும். மேலும் வரியில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 10 சதவீதத்தை அரசிற்கு கூடுதல் வரியாக செலுத்த வேண்டும். ‌ இதன் மூலம் கணக்கில் வராத தொகையை டெபாசிட் செய்பவர்கள் அதன் மதிப்பில் 50 சதவீதத்தை அரசுக்கு பல்வேறு பெயர்களில் தர வேண்டியிருக்கும். கூடுதல் வரியாக வசூலிக்கப்படும் 1‌0 சதவிகித தொகை நீர்ப்பாசனம், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது என்றும் இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கறுப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யாமல் ஏமாற்றியது அரசிற்கு தெரியவந்தால், அத்தொகைக்கு 75 சதவிகித வரி மற்றும் 10 சதவிகித அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்ய பொதுமக்களுக்கு வரும் டிசம்பர் 30ம் தேதி வரை அரசு காலஅவகாசம் வழங்கியுள்ளது. இதில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு உரிய கணக்கு காட்டப்படாவிட்டால் அது கறுப்பு பணமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என இம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?.. ரிசர்வ் வங்கி தகவல்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி முதல் 27ம் தேதிவரை, ரூ.8,44,982 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவரை ரூ.33,948 கோடி மதிப்புள்ள செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2,16,617 கோடியை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சிறு வணிகத்தை ஒழிப்பதற்கே டெபிட்கார்ட் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்...

பொதுமக்களிடம் இருக்கும் பணம் வங்கிகள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.... சிறு வணிகத்தை ஒழிப்பதற்கே டெபிட்கார்ட் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்...

உச்சவரம்பிற்கு அதிகமாக பணம் எடுக்க அனுமதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாடிக்கையாளரின் தேவையைப் பரிசீலித்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு அதிகமாகவும் பணத்தை அளிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 500 மற்று 2,000 ரூபாய் நோட்டுகளாக வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிகளில் பணத்தை செலுத்த மக்கள் தயங்குவதாகக் கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள் வரும் முஸ்லிம் கை வலுப்படும் இன்ஷா அல்லாஹ்

தமிழக முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டி அழகு பார்கிறது தமிழக ஊடகங்கள் ...
மதுரையில் முஹமது கறீம் , ஆசிக் சுல்தான் , அப்பாஸ் அலி ஆகிய மூன்று இஸ்லாமிய இளைஞர்களை மதுரை காவல்துறையும் , தேசிய புலனாய்வு துறையும் விசாரனைக்கு அழைத்து சென்று உள்ளனர் ....
இந்த மூன்று இளைஞர்களின் மீதும் எந்த குற்றச்சாட்டும் இன்னும் உறுதி செய்யபடவில்லை .
பொய் வழக்கு கைது செய்து தீவிரவாதி போல் முஸ்லிம் விரோத போகு தொடருந்து செய்து வரும் காவி துறை ஒரு நாள் வரும் முஸ்லிம் கை வலுப்படும் இன்ஷா அல்லாஹ்

திங்கள், 28 நவம்பர், 2016

ச்சும்மா கிழி கிழி கிழி..!


யூதர்களை குலை நடுங்கச் செய்த பாங்கு!

யூதர்களை குலை நடுங்கச் செய்த பாங்கு!


இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பாங்கு சொல்லி அதிர வைத்த இஸ்லாமிய உறுப்பினர் .மெய்லிசிர்க்க வைத்த இவரின் வீரம்...
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது எழுந்து சென்ற அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார்.
இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூத விரோதிகள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார்.
இந்த செயல் யூதர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை இஸ்லாமிய எதிரிகளின் முன்னர், ஒரு இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அல்லாஹு அக்பர்

விடுதலைப் புலிகளின் அழிவிற்கு இரண்டு அதிமுக்கிய காரணங்கள்.

1) தமிழர் என்னும் நிலையிலிருந்து தடம் புரண்டு மத ரீதியாக திரும்பி, முஸ்லிம்களை கொன்று குவித்தது.
2) இந்திய தேசத்தின் எதிர்காலம் திரு.ராஜீவ் காந்தி அவர்களை அநீதியாக படுகொலை செய்து, அதுகாறும் தனக்கு பொருளாதார - ஆயுத உதவிகளை வாரி இரைத்த இந்தியாவை எதிரி நாடாக உருவாக்கிக் கொண்டது.

”வாழ்வோ சாவோ பிரதமர் மோடியை அரசியலிலிருந்து வெளியேற்றுவேன்”

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் நடந்த கண்டன ஊர்வலத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சபதம்...

தாயத்து !!!!!!!!!


மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையால் பொதுமக்களும், பெண்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.  

மேலும் தவறான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார். 

இந்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புள்ளதால், தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழைக்கும், கடலோர பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

பல முறை எச்சரிக்கை செய்துவிட்டோம் மீண்டும் ஒரு முறை!

பல முறை எச்சரிக்கை செய்துவிட்டோம்
மீண்டும் ஒரு முறை! 
தயவு செய்து உங்கள் ஆன்ராய்டு போனில் 
மொபைல் டாட்டா(Mobil data ) ஆன் பண்ணி பாக்கெட்டில் போனை வைக்காதீர்கள். 
முக்கியமாக பெட்ரோல் பங்கில் பெட்ரோல் 
அடிக்கும் நேரம்.
அதன் விளைவுதான் இந்த வீடியோவில் பார்ப்பது...