வியாழன், 10 நவம்பர், 2016

டெபாசிட்டுகள் வருமான கணக்குடன் பொருந்‌தாவிட்டால் வரியுடன் 200% அபராதம்

இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் டெபாசிட்டுகள் வாடிக்கையாளர்களின் வருமானங்களோடு முறையாக பொருந்திச் செல்லாவிட்டால் அதற்கான வருமான வரியும், வரித்தொகை மீது 200 சதவிகித அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி அதாவது இன்று முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் 500 மற்றும் 1000 ரூபாய்களாக செய்யப்படும் டெபாசிட் குறித்த தகவல்களை வங்கிகளிடம் இருந்து மத்திய அரசு கேட்டுப்பெற உள்ளது.
மேலும் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட்டுகள் செய்யும் வாடிக்கையாளர்கள் அதற்கு முறையான ஆதராங்களை காட்ட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் டெபாசிட்டுகள், வாடிக்கையாளரின் வருமானத்துடன் பொருந்திச் செல்லாவிட்டால் அதற்கான வருமான வரியும், ‌வரித் தொகை மீது 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய வருவாய்த் துறைய செயலாளர் ஹஷ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

Related Posts: