வியாழன், 10 நவம்பர், 2016

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றும் வழிகள்: எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்....

வங்கிகளில் 4 ஆயிரம் ரூபாய் வரை பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு செல்வோர் என்னென்ன எடுத்து‌ செல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம்.
அனைத்து வங்கிகளிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டுள்ள இந்த விண்ணப்பத்தில் பணத்தை மாற்ற நீங்கள் சென்றுள்ள வங்கியின் பெயரை பதிவிட வேண்டும். அடுத்ததாக யார் பணத்தை மாற்றுகிறாரோ அவரது முழு பெயரை எழுத வேண்டும். எத்தனை 500 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகின்றன, அவற்றின் மொத்த மதிப்பு என்ன? அதே போல எத்தனை 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகின்றன? அவற்றின் மொத்த மதிப்பு என்ன என்பதை குறிப்பிட வேண்டும். இத்துடன் பணம் மாற்றம் செய்பவர் ஊர் மற்றும் தேதியுடன் கூடிய கையெழுத்து போட வேண்டும். இந்த விண்ணப்பத்தோடு அடையாள அட்டை ஒன்றின் நகலையும் செலுத்த வேண்டும். ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் நகலை விண்ணப்பத்‌தோடு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தடுமாறும் நபர்களுக்கு அந்தந்த வங்கிகளில் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.