சனி, 12 நவம்பர், 2016

20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசி பிரஸ் அபுதாகிர் மதுரை சிறையில் உண்ணாவிரதம் ..

20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசி பிரஸ் அபுதாகிர்
மதுரை சிறையில் உண்ணாவிரதம் ..
1997 ஜனவரியில் பொள்ளாச்சியில் பழனிபாபா கொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் கலவரம் ஏற்பட்டது .இதில் ஒரு கொலை வழக்கில் பிரஸ் அபு @அபுதாகிர் ஜாகீர் உசேன், ரிஸ்வான் பாஷா ஆகியோர் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
2007ம் ஆண்டு பத்தாண்டு பூர்த்தியான கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்தபோதும் அரசு இவர்களை மட்டும் விடுதலை செய்யவில்லை .
2008 ம் வருடம் 7 ஆண்டுகள் பூர்த்தியான 1405 ஆயுள் கைதிகளை விடுதலை செய்தபோதும் இவர்களை மட்டும் விடுதலை செய்யவில்லை .
பிரஸ் அபுதாகீர் மதுரை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டபோது, நீதிமன்றம் இவரின் விடுதலையை பரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிட்டும் தமிழக அரசு அதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டது ...
சட்டப்படியும் சிறை விதிகளின் படியும் மற்ற சிறைவாசிகளுக்கு கிடைக்கும் எந்த உரிமையும் முஸ்லிம் என்ற காரணத்தால் இவர்களுக்கு மறுக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவாக இருக்கும் வயதான தன் தாயாரை பார்க்க அனுமதி வேண்டி கோரிக்கை வைத்தார் . சிறை விதிகளின்படி ஆண்டுக்கு 15 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி உண்டு . ஆனால் இருபது ஆண்டுகளாக சிறையில் இருந்தும் 8 மணிநேரம் மட்டுமே மட்டும் செல்ல அனுமதி கொடுத்துள்ளதால்,இந்த பாரபட்சத்தை கண்டித்தும் சிறை விதிகளின் படி தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க கோரியும் இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது . மதுரை சிறையில் தனிமை கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள இந்த சகோதரனுக்கு உரிய நீதி கிடைக்க இந்த சமுதாய இயக்கங்கள் குரல் கொடுக்குமா ?
-- அலி அப்துல்லாஹ்
மாநில துணை பொதுச்செயலாளர்
இந்திய தேசிய லீக் கட்சி .

Related Posts: