
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் என்று பிரதமர் மோடி அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்படும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிட்ருந்த சில நிமிடங்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
November 08, 2016 - 08:53 PM