வெள்ளி, 18 நவம்பர், 2016

புதிய 500 ரூபாய் நோட்டு தமிழகத்துக்கு எப்போது வரும்?

தமிழகத்தில் புதிய ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ள நிலையில், புதிய ரூ. 500 நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிங்க் நிறத்தில் உள்ள இந்த புதிய ரூ.2,000 நோட்டில் தேசத் தந்தை மாகாத்மா காந்தியின் புகைப்படம் வலது புறத்தில் இருந்து மையப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் புதிய ரூபாய் நோட்டில் காந்தி தனது டிபி-யை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.
புதிய ரூ.500 நோட்டுகள் வட மாநிலங்களில் புழக்கத்துக்கு வந்துள்ளது. புதிய ரூ.2,000 நோட்டுகளுடன் செல்ஃபி எடுத்த நிலை மாறி, தற்போது புதிய ரூ. 500 நோட்டுகளுடன் செல்ஃபி எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. இதையடுத்து தமிழகத்து நெட்டிசன்கள் புதிய ரூ.500 நோட்டுகளுடன் எப்போது செல்ஃபி எடுப்பது என்ற ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ரூ. 500 நோட்டுகள் எப்போது புழக்கத்தில் வரும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts: