கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வில் வைகை நதிக்கரையின் நகர நாகரீகம் இரண்டாயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது. அதன்பின்னர் கீழடி அகழாய்வு பகுதிகளை விரிவுபடுத்தி பணிகளை தொடர்ந்து நடத்தி, தமிழர்களின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடத்தில் பணிகள் தொடங்கின. 10 ஏக்கர் பரப்பளவில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 8 மாத காலத்திற்கு இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
கீழடியில் தொடங்கியுள்ள 6ம் கட்ட அகழாய்வில் தமிழரின் தொன்மை பற்றிய மேலும் பல உண்மைகள் வெளிவரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்தார்.
credit ns7.tv