வெள்ளி, 25 நவம்பர், 2016

புதிய 500 ரூபாய் நோட்டை அவசராமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது

1


மக்களிடையே புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைத்தாலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.
ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பதால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். ஒரு 500 ரூபாயில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுக்கு நேர் எதிராக, மற்றொரு 500 ரூபாய் நோட்டை காணமுடிகிறது. அதாவது, காந்தியின் முகத்திற்கு அருகே நிழல் அதிகளவிற்கு இருக்கிறது. அதேபோல், தேசியச் சின்னம், பாதுகாப்பு அம்சம் நிறைந்த கோடு, காந்தியின் காது அருகே பொறிக்கப்பட்டிருக்கும் 500 ரூபாய் என்ற எழுத்து போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
இதனிடையே புதிய 500 ரூபாய் நோட்டுகள் அவசரம் அவசரமாக அச்சிடப்பட்டதால் தான் இந்த தவறு நேர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விதமான நோட்டுகள் இருப்பதால், மக்களிடையே குழப்பம் ஏற்படுவதோடு மட்டுமின்றி, கள்ள நோட்டு புழக்கத்திற்கும் வழிவகுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.