செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இதுவரை இருந்தவர்கள் யார்?

 காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து எழுந்துள்ள சர்ச்சை, காரியக்கமிட்டி கூட்டத்தில் அரங்கேறிய நிகழ்வுகள் என காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் நாடு முழுவதும் அரசியல் ரீதியிலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் காமராசர் மட்டுமே. சுதந்திரத்திற்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் யார், எத்தனை ஆண்டுகள் அவர்கள் பதவியில் இருந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

2

01. ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி - ( 1 ஆண்டு, 1947)
02. போகராஜூ பட்டாபி சீத்தாராமையா - ( 1 ஆண்டு, 1948 - 1949)
03. புருசோத்தம் தாஸ் தாண்டன் - ( 1 ஆண்டு, 1950)
04. ஜவஹர்லால் நேரு - ( 3 ஆண்டுகள், 1951 - 1954)
05. யு. என். தேபர் - ( 4 ஆண்டுகள், 1955 - 1959)
06. இந்திரா காந்தி - ( 1 ஆண்டு, 1959)
07. நீலம் சஞ்சீவ ரெட்டி - (3 ஆண்டுகள், 1960 - 1963)
08. காமராசர் - (3 ஆண்டுகள், 1964 - 1967)
09. நிஜலிங்கப்பா - (2 ஆண்டுகள், 1968 - 1969)
10. ஜக்ஜீவன் ராம் - ( 1 ஆண்டு, 1970 - 71)
11. சங்கர் தயாள் சர்மா - (2 ஆண்டுகள், 1972 - 1974)
12. தேவ காந்த பருவா -  (2 ஆண்டுகள், 1975 - 1977)
13. காசு பிரம்மாணந்த ரெட்டி - ( 1 ஆண்டு, 1977 - 78)
14. இந்திரா காந்தி - ( 6 ஆண்டுகள், 1978 - 83; 1983 -84)
15. பிவி. நரசிம்ம ராவ் - (6 ஆண்டுகள், 1991 - 1996)
16. சீதாராம் கேசரி - (2 ஆண்டுகள், 1996 - 1998)
17. சோனியா காந்தி - (19 ஆண்டுகள், 1998 - 2017)
18. ராகுல் காந்தி - (2 ஆண்டுகள், 2017 - 2019)
19. சோனியா காந்தி - (இடைக்காலத்தலைவராக 2 ஆண்டுகள், 2019 முதல்)