500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், குழப்பங்களுக்கும் பொறுப்பேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணை தலைவர் தாமஸ் ப்ரான்கோ சாடியுள்ளார்.

மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு தாமஸ் ப்ரான்கோ அளித்துள்ள பேட்டியில், ”500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு முழுக்க முழுக்க முன் ஏற்பாடுகள் இல்லாத சொதப்பலான முயற்சி. கடந்த 12 நாட்களாக வங்கி ஊழியர்களுக்கு கடுமையான வேலைப்பளு. தொடர்ந்து பல மணிநேரங்கள் பணியாற்றியதால் இதுவரை 11 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் அருண் ஜெட்லி பொருளாதார வல்லுநர்கள் கிடையாது. ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு இந்த திடீர் நடவடிக்கையால் மக்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என்பது தெரியாதா? எனவே குழப்பங்களுக்கும், இழப்புகளுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று கூறியுள்ளார்.
http://www.vikatan.com/news/india/73017-rbi-head-urjit-patel-must-quit-says-leader-of-bank-officers-union.art