செவ்வாய், 22 நவம்பர், 2016

உலகில் 'செல்பி' எடுக்கும்போது இறந்தவர்களின் பட்டியல்.. இந்தியா முதலிடம்..!

‘செல்பி’ மோகத்தில் மூழ்கியுள்ள இன்றைய இளம் தலைமுறையினர் அதற்கான பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றனர். உலகில் ‘செல்பி’ எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுக்கும் பழக்கத்தினால், விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் வந்த பிறகு வெற்றியோ.? தோல்வியோ.? நல்லதோ.? கெட்டதோ.? வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செல்பி எடுக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் பெருகி வருகிறது. ரயில் தண்டவாளம், உயரமான மலை போன்ற ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து சிலர் இறந்துள்ளனர். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு ‘என் வாழ்க்கையை நானே அளித்தல்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 2014-ஆம் ஆண்டு 15 பேரும், 2015-ஆம் ஆண்டு 39 பேரும், 2016 -ஆம் ஆண்டு 73 பேரும் செல்பி எடுக்கும் போது இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் செல்பி எடுக்கும் போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த ஆய்வின் படி, செல்பி எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Posts: