செவ்வாய், 22 நவம்பர், 2016

கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்

1982 கானா- வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்காக கானாவின் கரன்சி  50 ’செய்டி’ யை செல்லாது என அறிவித்தது. ஆனால் கானாவினர் வெளிநாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கியது மட்டுமில்லாமல்கறுப்பு சந்தையில் சொத்துகளை சேர்பதிலும் கவனம் செலுத்தியதால் அரசின் இந்த முயற்சி தோல்வியடைந்தது.

☻1984 நைஜீரியா - ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவின் ராணுவ அரசு புது கரன்சி நோட்டுகளை புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.

☻1987 மியான்மர் - நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக , 80 சதவீத கரன்சி நோட்டுகளை செல்லாது என மியான்மரின் ராணுவ அரசு அறிவித்தது. இது பொருளாதார நெருக்கடியை கிளப்பிவிட நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.

☻1991 சோவியத் யூனியன் -    கரன்சி மதிப்பை கூட்டுவதற்கு  50,100 ரூபல் நோட்டுகளை செல்லாது என்று  மிக்கேல் கோர்பஷேவின் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு கொடுத்த அடுத்த எட்டே மாதங்களில் ஆட்சி  கலைக்கப்பட்டது.  

☻1993 சையர்  - சர்வாதிகாரி மொபுடுவின் ஆட்சியில் கரன்சி சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன, இதன் முடிவாக செல்லா காசுகளை திரும்பப்  பெறுவதாகவும் அறிவித்தார். ஆனால் இது மேலும் பொருளாதார நெருக்கடியை மக்களுக்கு அதிகரிக்க,  1997 ல் மொபுடுவின் ஆட்சி கலைக்கப்பட்டது.

☻1996 ஆஸ்திரேலியா - பேப்பரில் இருந்த கரன்சி நோட்டுகளை பிளாஸ்டிக் கரன்சியாக மாற்றியது ஆஸ்திரேலிய அரசு. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை கட்டுபடுத்துவதற்காக உலகில் முதன் முறையாக இது அறிமுகப் படுத்தப்பட்டது.
 
☻2015 பிலிப்பைன்ஸ்  - கள்ள நோட்டை தடுப்பதற்காக 30 வருடமாக இருந்த நோட்டுகளை செல்லாது என அரசு அறிவித்து, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

2015 .ஜிம்பாவே - உயர் பணவீக்கத்தினால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகபே நூறு   டிரில்லியன் டாலர் நோட்டை அறிமுகப்படுத்தினார். இதன் மதிப்பு உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் 30 ரூபாயாக   குறைய, டிரில்லியன் டாலர் நோட்டுகளை ஜிம்பாவேயினர் இணைய வர்த்தக தளங்களில் விற்க முயற்சி செய்தனர்.

☻2010 வட கொரியா-  கறுப்பு பணத்தில் நடக்கும் வர்த்தகத்தை தடுப்பதற்காக கரன்சி சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார் இரண்டாம் கிம் ஜாங்.  ஆனால் அது மக்களை உணவில்லாமல், இருக்க இடமில்லாமல் போகும் பரிதாப சூழலுக்கு தள்ளிவிட்டது.  

☻2002- .யூரோப் -  -யூரோப்பில் பன்னிரண்டு நாடுகள், யூரோப்பியன் யூனியன் குழுமத்தின் சார்பாக ஒரே நேரத்தில் தங்களின் கரன்சியாக யூரோவை மாற்றிக் கொண்டார்கள்.இந்த மாபெரும் கரன்சி மாற்றம் சுமார் 3 வருடங்களுக்கு மேல் திட்டமிட்டு செயல்படுத்தியதால் எந்தவித பாதிப்புமின்றி நடைமுறைக்கு வந்தது.

Related Posts: