இஸ்லாமியர்களுக்கு எதிரான டிரம்ப்பின் நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு…. உலகம் முழுவதும் கண்டனப் போராட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அகதிகள் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகின் பல நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காகவிக்கு வர காலவரையற்ற தடைவிதித்தும் ஈராக், லிபியா, ஏமன் உள்ளிட்ட ஏழு நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏமன் நாட்டை சார்ந்த பலதரப்பு மக்களும் அதிபர் டிரம்பின் இந்த அரசாணைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வாஷிங்டன் நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும் டிரம்பிற்கு எதிராக பதாகைகளை ஏந்திய அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்கின்றனர்.
இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் டிரம்பிற்கு எதிராக போராட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலகின் பிற நாடுகளிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டொனால்டு டிரம்பின் இந்த உத்தரவுக்கு தற்காலிக தடைவிதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்கள் பணி தொடர ஒத்துழைக்கலாமே!