வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஜாகிர் நாயக் உறவினரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட 9 லட்சத்தை NIA திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு! உண்மையை மறைத்த ஊடகங்கள்


மும்பை சிறப்பு MCOCA நீதிமன்றம், ஜாகிர் நாயக் உறவினர் வீட்டில் இருந்து சோதனையின் போது தேசிய புலனாய்வுத்துறை கைப்பற்றிய 9 லட்ச ரூபாயை சம்பந்தப்பட்ட நபரிடமே திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு NIA வின் செயல்பாடுகளை எதிர்த்து ஆமிர் கஸ்தர் என்ற ஜாகிர் நாயக்கின் உறவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு, NIA கைப்பற்றிய இந்த பணம் ஜாகிர் நாயக் மற்றும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அவரது நிறுவனமான IRF நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதற்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என்பதை அடுத்து ஏற்பட்டுள்ளது.
சிறப்பு MCOCA நீதிபதி வி.வி.பாடில், கஸ்தர் சார்பில் இந்த வழக்கறிஞர் இஷ்ரத் அலி கான் வழங்கிய விண்ணப்பத்தின் மீது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த விண்ணப்பத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 19 ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்ச ரூபாய் பணத்தை திருப்பித்தர NIAவிற்கு  உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஆமிர் கஸ்தரின் வீட்டில் இருந்து குறிப்பிட்ட ரொக்கப்பணத்தோடு மட்டுமல்லாது நகைகள், கணினி, Pen Drive, மெமோரி கார்ட்கள், ஹார்ட் டிஸ்க், பாஸ்போர்ட், ட்ரிவிங் லைசென்ஸ், போன்ற அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானவற்றை NIA  கைப்பற்றியது. இதில் தாங்கள் பணம் மற்றும் நகைகளை மட்டும் தற்போது கேட்கின்றோம் என்பதும் அவை அப்போது வீட்டில் இருந்ததற்கு காரணம் கஸ்தரின் மகளின் திருமணம் 2016 டிசெம்பர் மாதத்தில் நடக்க இருந்ததாகவும் அதனால் தான் அவை அந்த நேரத்தில் வீட்டில் இருந்தது என்றும் அவர் தனது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முன்னதாக நீதிமன்றம் நகைகளையும், ரூபாய் 80000 மதிப்பிலான பணத்தையும் அவை புதிய 2000 ரூபாய் தாள்களில் இருந்த காரணத்தினாலும் அவற்றிற்கான ரசீதுகள் நீதிமன்றத்திடம் சமர்பிக்கப் பட்டதாலும் திருப்பி வழங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றம் NIA விடம் திருப்பி வழங்கக் கோரி உத்தரவிட்ட 9 லட்ச ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் இருந்ததுள்ளது.
http://kaalaimalar.net/zakir-naik-nia/

Related Posts: