புதன், 1 பிப்ரவரி, 2017

பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் பொருட்கள்

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2017-18ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிகளால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்:
புகையிலை, பான் மசாலா
எல்இடி பல்புகள்
முந்திரி பருப்பு
அலுமினியம் தாது பொருட்கள்
ஆப்டிகல் இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய நாடாக்கள்
வெள்ளி நாணயங்கள் மற்றும் பதக்கங்கள்
தொலைபேசியில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் பலகை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் எனத் தெரிகிறது.

Related Posts: