ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஆளுநர் வித்யாசாகர் ராவின் பின்னணி

சென்னமனேனி வித்யாசாகர் ராவ். தமிழகமே இன்று விழி வைத்திருப்பது இவர் மேல்தான் என்று கூறலாம்.பரபரப்பான அரசியல் களத்தில் மையப்புள்ளியாக திகழும் ஆளுநர் வித்யாசாகர் ராவின் பின்னணி குறித்து இப்போது பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலத்தில் சிர்சில்லா என்ற ஊரில் 1942ல் பிறந்த வித்யாசாகர் ராவ் சட்டப்படிப்பை முடித்தவர். ஆரம்பத்தில் ஜனசங்க உறுப்பினராக இருந்த இவர் பின்னர் பாரதிய ஜனதாவில் இணைந்தார். 1985ல்‌ ஆந்திர சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக நுழைந்தார். ‌பின்னர் 1998ல் கரீம் நகர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை எம்பியாக உயர்ந்தார் வித்யாசாகர் ராவ். ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட இவருக்கு 1999ல் மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது.
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். அடுத்த கட்டமாக 2014ம் ஆண்டில் இவர் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார்.