திங்கள், 13 பிப்ரவரி, 2017

தமிழகத்தில் பிரச்சினை வெடிக்கலாம்… மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.. உஷார் நிலையில் போலீஸ்! போலிசே கலவரத்தை தூண்ட திட்டமாம் ?


தமிழகத்தில் பிரச்சினை வெடிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சசிகலா தரப்பினரால் பிரச்சினை அதிகமாகலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளதாம். சசிகலா தரப்பு நாளுக்கு நாள் படு வேகமாக பலவீனமடைந்து வருகிறது. அவர்களின் ஒவ்வொரு கதவும் மூடப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா தரப்பு விரக்தி அடைந்து வருகிறது. சசிகலாவே கூட நிதானம் தவறிப் பேச ஆரம்பித்துள்ளார். மிரட்டுவது போல பேச ஆரம்பித்துள்ளார்.
 மேலும் தஞ்சை, மன்னார்குடியிலிருந்து பெருமளவில் இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு சென்னை முழுவதும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவர்கள் சென்னையில் கலாட்டாவில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இரவும் கூட விடிய விடிய சென்னை நகரிலும், நகரின் எல்லைப் பகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சசிகலா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் எங்கெல்லாம் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாமும் கூட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
போலீஸ் கூட வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது .

http://kaalaimalar.net/ops-vs-sasikala-tn-put-under-high-alert-as-ib-warns-trouble/