முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நேற்றைய அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் மீடியாக்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் நமது ஜமாஅத்தின் கீழ்மட்ட நிர்வாகிகளும், பேச்சாளர்களும் சமூக வலைதளங்களில் தமதுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் கூட யாருக்கும் ஆதரவாகக் கருத்து சொல்வதில்லை என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். கருத்துச் சொல்ல தகுதியான தேர்தல் களத்தையே வேண்டாம் என விலகி இருக்கும் நிலையில், இப்போது ஒரு உட்கட்சி விவகாரத்தில் கருத்துச் சொல்வது சமுதாயத்திற்கு எந்தப் பயனையும் தராது.
கட்சிப் பிரமுகர்கள் அக்ச்கட்சிக்கு எதிராக செயல்படுவது என்பது அரசியலில் மிகச் சாதாரணமாக நடைபெறக்கூடியதே. எனவே உள் விவகாரம் என்னவென்று சரிவர தெரியாத இந்த நேரத்தில் நிர்வாகிகள், பேச்சாளர்கள் தமதுக் கருத்துக்களை பொது வெளியில் பகிர வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசுஃப்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு #தவ்ஹீத் ஜமாஅத்.