ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகம் மட்டுமில்லாமல் உலகமெங்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரியும். மாணவர்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், ரஜினிகாந்தோ ஜல்லிக்கட்டு போராட்டத்தை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவை கபளீகரம் செய்த சசிகலா குரூப், தமிழகத்தை கபளீகரம் செய்ய முயற்சி செய்தனர். சசிகலாவை முதல்வராக அறிவித்தனர். இதற்கு அதிமுக தொண்டர்களில் தொடங்கி தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது.
இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும், தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் சசிகலா நியமித்தார்.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தை இருள் சூழ்ந்துவிட்டது என்று ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் தற்போதைய ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இவர் இப்படி என்றால் நடிகர் ரஜினிகாந்தோ தமிழக அரசியல் பற்றி இதுவரை எந்த கருத்தும் கூறியதாக தெரியவில்லை. மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த கோல்டன் பே ரிசார்ட்சின் உரிமையாளர் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் உடையது என்று பரவலாக கூறப்படுகிறது.
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சகல வசதிகளும் பெற ரஜினிகாந்த் உதவியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழகத்தை சசிகலாவின் மாஃபியா கேங் சீரழித்து விடும் என்று கோபக்கனலாக தகிக்கிறார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அதே சசிகலா மாஃபியா கேங்கிற்கு ரகசியமாக நடிகர் ரஜினிகாந்த உதவுவதாக கூறப்படுகிறது.
kaalaimalar