புதன், 15 பிப்ரவரி, 2017

பிஜேபி யின் தொடர் சதிகள்

சசிகலாவின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முன்பே முயன்றார் சசிகலா இதையடுத்து சசிகலாவை சரிக்கட்ட முயன்றது பிஜேபி , அது ஒத்துவராததால் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து வருமானவரித்துறை அவருக்கு வேண்டிய இடங்களில் ரைடு நடத்தி சசிகலாவை மிரட்டியது ஜெயலலிதா உயிரோடு மருத்துவமனையில் இருக்கும்பொழுதே இதையடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை வைத்து ராகுல்காந்தியை தொடர்புகொண்டு ஆதரவு கேட்டனர் , அதன்பின் ஜெயலலிதாவை பார்க்கவந்த ராகுலகாந்தி அதிமுகவிற்கு காங்கிரஸ் உதவியாக இருக்குமென்று பேட்டிகொடுத்து சென்றார் இப்பிரச்னையில் அகிலஇந்திய காங்கிரஸ் தலையிட்டதால் சசிகலாவை மிரட்டுவதை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது இதையடுத்து ஜெயலலிதா மறைவு , இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பிஜேபி ஆதரவு பத்திரிக்கைகளை வைத்தும் , வாட்ஸ் அப் மற்றும் முகநூலிற்கு தனி ஆட்கள் போட்டு திட்டமிட்டு ஜெயலலிதா சாவிற்கு சசிகலாதான் காரணமென்று அதிகளவில் பரப்பி அப்பாவி மக்களை நம்பவைத்து பின்பு தீபாவை வைத்து சசிகளவிற்கு எதிராக பேட்டிகொடுக்கவைத்து தீபாவை முன்னிறுத்த முயன்றது பிஜேபி ஆனால் தீபாவிற்கு கட்சியளவில் பெரும் ஆதரவு இல்லாததால் முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை வளைத்து பிடித்து சரிசெய்தது பிஜேபி ஓபியை வளைத்து எப்படி ? ஓ பியின் பினாமியான சேகர் ரெட்டியை வளைத்து மிரட்டியது மிரட்டல் ஒருபக்கம் மீதமுள்ள நான்கு வருடங்களும் நீங்கள்தான் முதல்வர் என்ற ஆசைவார்த்தை ஒரு பக்கம் , இதில்சிக்கிய ஓபிஎஸ் சசிகலாவை பிஜேபி யின் திட்டப்படி எதிர்க்க ஆரம்பித்தார் அதற்கு பிறகு நடந்ததை அனைவரும் அறிவோம் பிஜேபி இப்படியெல்லாம் செய்ய என்ன காரணம் ? ஒரு MLA சீட்க்கூட இல்லாத பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என்றபெயரில் ஓபிஎஸ்ஸை வைத்து மறைமுக ஆட்சி செய்வதற்கும் , பாராளமன்றத்தில் தான்கொண்டுவரும் அணைத்து மதவெறி மக்கள்விரோத திட்டங்களுக்கும் அதிமுகவின் 49 MP க்களின் ஆதரவு தேவைப்படுகின்றது இந்த காரணங்களால்தான் MLA க்கள் ஆதரவு இருந்தும் ஆட்சியமைக்க வருமாறு சசிகலாவை ஆளுநர் அழைக்கவில்லை மத்திய பிஜேபி அரசின் முயற்சியால் உடனடியாக சசிகலாவின் வழக்கு தீர்ப்பிற்கு வந்தது தற்போதைய நிலை MLA க்கள் ஆதரவு சசிகலா பக்கமிருப்பதால் தான் இல்லாவிட்டாலும் தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க சசிகலா முயல்கின்றார் இதையெடுத்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார் நியாயப்படி பார்த்தல் எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைத்து சட்டமன்றத்தில் தனது பலத்தை காட்ட சொல்லவேண்டும் இதுதான் நியாயம் ஆனால் பிஜேபி இப்படியெல்லாம் செய்யவிடுமா ? தொடர்ந்து இன்னும் என்னவெல்லாம் பிஜேபி செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் …
http://kaalaimalar.net/ops_modi/

Related Posts: