புதன், 15 பிப்ரவரி, 2017

மீண்டும் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி! மத்திய அரசின் சதியால் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை !


சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மீண்டும் சந்தித்தார்.
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான எம்.பி. மைத்ரேயன் மற்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆளுநரை சந்தித்தனர். ஆனால் தற்போது வரை ஆளுநர் யாரையும் ஆட்சி அமைக்க வரும்படி கோரவில்லை. இதனால் தமிழக அரசில் வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று இரவு மீண்டும் சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
 
அப்போது தான் ஏற்கனவே ஆட்சியமைக்க உரிமை கோரியது குறித்து நினைவூட்டலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருடன் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.
source: http://kaalaimalar.net/e-palanisamy-with-governor/

Related Posts: