ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

வாக்குச் சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்த பாஜக பிரமுகர்! தாக்குதல் நடத்த திட்டமா ? அதிரடி கைது ! விபரம் !



வாக்குச்சாவடிக்கு துப்பாக்கியுடன் வந்த பாஜக எம்எல்ஏவின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பரித்பூர் வாக்குச் சாவடிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்ததாக சர்தனா தொகுதி பாஜக எம்எல்ஏவான சங்கீத் சோமின் சகோதரர் ககன் சோம் கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் சங்கீத் சோம், உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் சிறைதண்டனை பெற்றவர்.
http://kaalaimalar.net/bjp-lawmaker-sangeet-soms-brother-detained-for-carrying-pistol-inside-polling-booth/