முதல்வர் பன்னீர்செல்வத்தை, பாரதிய ஜனதா கட்சி பின்புலமாக இருந்து இயக்குவதாக ஒரு வலுவானக் குற்றச்சாட்டு உண்டு.
ஆனாலும், சசிகலா ஒழிந்தால் சரி என்ற எண்ணத்தில், அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ள பன்னீர்செல்வத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பன்னீர்செல்வத்தின் பின்புலமாக இருந்து அவரை பாரதிய ஜனதா இயக்கி வருகிறது என்று பலர் நேரடியாகவே கூறி வருவதையும் காண முடிகிறது.
இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா முகநூல் பக்கத்தில், காவிக்கொடி பேனரில் “பிரதமர் மோடி தலைமையில் ஊழல் இல்லா தேசியம் அமைத்தோம்”.
“அடுத்து ஊழல் இல்லா தமிழகம் அமைப்போம். இன்று முதல் அதற்கான பணியை மேற்கொள்வோம்” என்ற பதிவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் மோடி, அமித் ஷா, தமிழிசை ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
வெங்கையா நாயுடு போன்ற மூத்த தலைவர்கள் தமிழக அரசியல் பிரச்சினைக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று பலமுறை செய்தியாளர்களிடம் கூறி வருகின்றனர்.
ஆனால் தமிழக பாஜக வின் முகநூல் பதிவு “என் அப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற பாணியில் வெளிப்படையாகவே உண்மையைப் போட்டு உடைத்துள்ளது.
