வியாழன், 9 பிப்ரவரி, 2017

பிரதமரின் போக்கு வேதனையளிக்கிறது... ராகுல் காந்தி



முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் தெரிவித்த கருத்துகள் அவமானகரமானவை என்றும் வருத்தமளிப்பவையாக இருந்தன என்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இதுபோன்ற மோசமான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் மோடி தம்மை தாமே சிறுமைப்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளார். தம்மைவிட வயதில் மூத்த ஒரு முன்னாள் பிரதமரை, தற்போதைய பிரதமர் கேலி செய்வது நாடாளுமன்றத்தின் மாண்பையும் நாட்டின் கண்ணியத்தையும் குலைக்கும் செயல் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/79555/rahul-gandhi-says-pm-modis-remarks-on-manmohan-singh-demean-his-position