உத்தரப்பிரதேசத்தில் ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் நோய் பாதிப்பினால் குழந்தை ஒன்று ஏலியன் போல் பிறந்துள்ளது.
சாக்கியா நகரில் பலிந்திரா மக்டோ(34) மற்றும் பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தை ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அந்த குழந்தையின் கண்கள் பெரிதாகவும், சிதைக்கப்பட்ட முகம், மிக பெரிய தலை, தலையின் மேல் கட்டி போன்று காணப்படும் உருவத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தாய் பிரியங்கா கூறுகையில், நான் முதல் முதலில் குழந்தையை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். நானும் என் கணவரும் குழந்தை ஆணோ, பெண்ணோ நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டோம். ஆனால் குழந்தை வித்தியாசமாக பிறந்துள்ளது. இது எங்களுக்கு சபிக்கப்பட்ட சாபம் என்று கூறுகிறார்.
இது குறித்து மருத்துவர் ராஜன் சின்ஹா கூறுகையில், குழந்தைக்கு ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தையின் இத்தகைய தோற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறினார். குழந்தையை பார்த்து செல்லும் அக்கம்பக்கத்தினர் கடவுளின் அவதாரமாக இந்த குழந்தை உள்ளது என்று நம்புகின்றனர்.
பதிவு செய்த நாள் : February 06, 2017 - 12:19 PM