நாகை மாவட்டத்தில் சீமைக்கருவை மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் வேகமாகப் பரவி வருகிறது.
நாகை புதிய கடற்கரையில் உள்ள சீமைக் கருவை மரங்களை அகற்றும் பணிகளில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது நாகை வெளிபாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் ரோந்து வந்தார். அங்கு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் சாவியை ராஜேஷ் எடுத்துள்ளார். இதைப் பார்த்த இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அந்த இளைஞர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.