ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் குழப்பம்


Rajajiஇந்தியாவில் மாநிலங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல்வேறு சமயங்களில் அரசியல் சட்டக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் இதே போன்ற குழப்பம் நிலவி வருகிறது. சுதந்திர இந்தியாவில் ஆட்சி அமைப்பதில் முதன்முதலாக ஏற்பட்ட குழப்பமும் தமிழகத்தில்தான் நிகழ்ந்தது தான்.

1952ம் ஆண்டில் தமிழகத்தை உள்ளடக்கிய அப்போதைய சென்னை மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 375 தொகுதிகளில் 152ல் மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அப்போது, கம்யூனிஸ்ட்டுகள் பிற கட்சிகளுடனும் சுயேச்சைகளு‌னுடனும் இணைந்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரை வலியுறுத்தினார் இதனால் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற குழப்பம் ஆளுநருக்கு ஏற்பட்டது. ஆனால், ராஜாஜி போன்ற வலிமையான தலைவர் ஒருவரே நிலையான ஆட்சி தர முடியும் என ஆளுநர் பிரகாசாம் திடமாக நம்பி அழைப்பு விடுத்தனர்.
அப்போதுதான் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் உள்துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பையும் ராஜாஜி வகித்து முடித்திருந்தார். இதனால் சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்க ராஜாஜி தயங்கினார். தேர்தலில் நின்று வெற்றிபெறாத அவரை எப்படி முதல்வராக்க முடியும் என்றும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் ராஜாஜியை ஆளுநர் பிரகாசம் மேலவை உறுப்பினராக நியமித்து முதல்வராக வழி ஏற்படுத்தினார் எனினும் ராஜாஜி முதல்வரான விதம் பிரதமராக இருந்த நேருவுக்கு ‌அதிருப்தியை ஏற்படுத்தியது.
பொதுத் தளங்களிலும் ராஜாஜி முதல்வரான விதம் குறித்து விமர்சனங்கள் இருந்தன. முதலமைச்சராக இருந்தபோது ராஜாஜி கடுமையான முடிவுகளை எடுத்தார். அவர் கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1954ல் ராஜாஜி ராஜினாமா செய்து காமராசர் பொறுப்பேற்றார்.