வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மீரட்டில் ஈ விரட்டிய பாஜக கூட்டம்: அசிங்கப்பட்ட அமித் ஷா –







மீரட்டில் பாஜக கூட்டத்திற்கு மக்கள் யாரும் வராத காரணத்தால் அங்கு அமித் ஷா தலைமையில் நடக்கவிருந்த பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை அடுத்து இனி அங்கு நடக்க இருந்த அனைத்து பாதயாத்திரைகளையும் பாஜக ரத்து செய்துள்ளது. தங்களது நிகழ்ச்சிக்கு இருபது பேரை அழைப்பதே பெரும் பாடாகிவிட்டது என்று அப்பகுதி பாஜக நிர்வாகிகள் கூரியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இனி வர இருக்கும் அனைத்து பாதயாத்திரை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது பாஜக தங்களின் இந்த நிலைக்கு காரணம் சமீபத்தில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி மிகப்பெரும் தோல்வியடைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் என்று தெரியவந்துள்ளது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் சமூக அமைதிக்கு கெடுதல் விளைவிக்கும் பாஜக வின் கொள்கைகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். தங்கள் நிகழ்ச்சிகளுக்கு கூட்டங்களை சேர்க்க முடியாதது குறித்து அப்பகுதி நிர்வாகிகளை பாஜக மேலிடம் கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி பாஜக தலைவர்கள், அனைத்து கொள்கை மற்றும் திட்டங்களும் மத்திய அரசால் வகுக்கப்படுகிறது, ஆனால் ஏதாவது அவர்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் அதற்கான பலியை நாங்கள் சுமக்க வேண்டியுள்ளது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அதிருப்தியால் சில பாஜக நிர்வாகிகள் தேர்தல் முடிவடைந்ததும் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அமித் ஷாவின் பாதயாத்திரை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு கூட்டமின்மையை ஒரு காரணமாக கூறினாலும் அப்பகுதி மக்களின் மனநிலை அங்கு பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் நிலையில் மோசமடைந்திருப்பதாகவும் அதனால் தான் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு உத்திர பிரதேச பகுதிகள் பாஜகவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த 2014 தேர்தலில் இப்பகுதியில் மக்களை பிளவு படுத்தியதன் மூலம் பாஜக கணிசமான ஓட்டுகளை இப்பகுதிகளில் பெற்றது குறிப்பிடத்ததக்கது தற்போது மீரட்டில் நடைபெற இருந்த பாதயாதிரைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தரப்பு அப்பகுதியில் கொல்லைகாரர்களால் வியாபாரிகள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்தே தங்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது. http://kaalaimalar.net/surat-meet-chaos-amit-shah-meet-chaos-amit-shah-bjp-meet-gujarat/