''தன்னைக் கொல்லாமல் விட்டு விடும்படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்?
19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி, அதில் மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன் றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?
தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னா லேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?
கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா - பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர்,எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர்.
அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக்கார கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர்என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.
இளம்பெண்களும், முதிர்பெண்களும்கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண்டேயிருந்தன.இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும் பத்து ஆண்களின் கண் முன்னாலேயே பாலியல் வன்முறை செய்து, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத் தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.''
(நன்றி : விடுதலை நாளிதழ்)