15 3 23
ப. சிதம்பரம்
எனது தனிப்பட்ட கருத்தின் படி, கடந்த ஆண்டுடனான காலாண்டு மதிப்பீட்டு ஒப்பீடோ, தொடர்ச்சியான காலாண்டுகளின் மதிப்பீடோ பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டிவிடாது. ஒவ்வொரு காலாண்டிலும் நம் அனைவருடைய பெருமுயற்சியால் ஏற்படும் மொத்த உற்பத்தி தான் உண்மையான உற்பத்தியாக இருக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் 2008 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்க்கட்சியினரை பார்த்து இப்படி சொன்னார். பன்றியின் உதடுகளுக்கு நீங்கள் லிப்ஸ்டிக் போட்டு சிவக்க வைக்கலாம். ஆனால் லிப்ஸ்டிக் பூசப் பட்டாலும் பன்றி, பன்றி தானே என்று ஒரு வித்தியாசமான சொற்றோடரை சொல்லி விமர்சித்தார். மாற்றுக் கட்சியினரின் நடவடிக்கைகளை அவர் விமர்சித்த விதம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இருபதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பல நாடுகளிலும் இந்த சொற்றொடர் புழக்கத்தில் இருக்கிறது.
இந்தியாவின் தேசிய வருவாய் தொடர்பாக 2023 பிப்ரவரி 28 இல் அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையைப் படித்தவுடன் எனக்கு ஒபாமாவின் மேற்கோள் தான் நினைவுக்கு வந்தது. எண்கள் என்றுமே பொய் சொல்வது கிடையாது. எண்களை திரித்த திரிபுகள் தான் பொய்களை மற்றும் பொய்யான விளக்கங்களை அளிக்கின்றன. ஒன்றிய அரசு 2023-24 பட்ஜெட்டிற்கு பிறகு, நிதியமைச்சர் 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று சொன்னார்.
அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் உட்பட ஏராளமான அரசு அதிகாரிகள் இதையே வலியுறுத்திப் பேசி வருகின்றனர். இது அப்படியே இருந்தாலும், நடந்து விட்டாலும் 2022-23 நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் அடுத்தடுத்து கிடைத்த உண்மையான புள்ளிவிவரங்கள் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே வருவதைத்தான் காட்டுகின்றன.
தேசிய புள்ளி விவர அலுவலகத்தின் மதிப்பீடு படி முதல் மூன்று காலாண்டுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சியானது 13.2%, 6.3%, 4.4% என்று இருக்கிறது. கடந்த ஆண்டுடனான காலாண்டு மதிப்பீட்டு ஒப்பீடோ, தொடர்ச்சியான காலாண்டு மதிப்பீடோ பொருளாதாரத்தின் உண்மைத்தன்மையை காட்டிவிடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஒவ்வொரு காலாண்டிலும் நம் அனைவருடைய பெருமுயற்சியால் ஏற்படும் மொத்த உற்பத்திதான் வளர்ச்சியை அறிய சரியான அளவுகோல். ஒட்டுமொத்தமான மதிப்புக்கூட்டலையும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் அடிப்படையாகக் கொண்டு காலாண்டு உற்பத்தியை என்எஸ்ஓ கணக்கிட்டுள்ளதை இந்த அட்டவணையின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த மதிப்புகள் முழுமையான மிக சரியான மதிப்புகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு வருடத்திற்கு முந்தைய காலாண்டில் அல்லது முந்தைய காலாண்டின் வளர்ச்சி விகிதம் அல்ல. பொருளாதாரம் வேகமாக வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தால், ஒரு காலாண்டில் உற்பத்தியின் மதிப்பு முந்தைய காலாண்டில் அல்லது அதற்கு முந்தைய காலாண்டுகளின் வெளியீட்டின் மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருக்க எந்த காரணமும் இல்லை.
எடுத்துக்காட்டாக, உற்பத்தித் துறை நல்ல ஆரோக்கியத்துடன், வேலைவாய்ப்பு பராமரிக்கப்பட்டு, தேவை சிறப்பாக இருந்திருந்தால், உற்பத்தித் துறையின் உற்பத்தியின் மதிப்பு ஏன் முதல் காலாண்டில் ரூ.6,39,243 கோடியிலிருந்து இரண்டாம் காலாண்டில் ரூ.6,29,798 கோடியாக குறைய வேண்டும்? இத்துடன் மின்சாரம், எரிபொருளாக பயன்படும் கேஸ், தண்ணீர் போன்றவற்றின் உற்பத்தி மதிப்பும் அடுத்தடுத்த காலாண்டுகளில் குறைந்து கொண்டே வருவதையும் காணலாம். இவை அனைத்தும் உற்பத்தியுடன் தொடர்புடைய மிகவும் அத்தியாவசியமான மூலப் பொருட்கள்.
எண்கள் பொய் சொல்லாது
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் பொருளாதாரத்தை பார்த்தால், அரசாங்கத்தின் இறுதி நுகர்வுச் செலவுகளை அரசால் சீராக வைத்திருக்க முடியவில்லை என்பதுடன் மொத்த நிலையான மூலதன சேமிப்பு மூன்று காலாண்டுகளில் ஏற்றமும் இறக்கமுமாக இருப்பதை காணலாம். தேக்க நிலையில் இருக்கும் இந்த ஏற்றுமதி, இறக்குமதி மதிப்புகள் இரண்டுமே தேக்க நிலையில் இருக்கிறது. வலுவான வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை.
கவலைக்குரிய எண்களின் மற்றொரு தொகுப்பு தனி நபர்களின் இறுதி நுகர்வுச் செலவு தான். . சாதாரணமாக, ஒவ்வொரு காலாண்டிலும் நுகர்வு செலவு ஒவ்வொரு காலாண்டுக்கும் சுமார் ரூ.3,00,000 கோடி வரை உயர்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் இந்த நுகர்வு அதிகரிப்பு இரண்டாம் காலாண்டில் ரூ 1,21,959 ஆகவும், மூன்றாம் காலாண்டில் ரூ 1,68,005 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது கேட்பில் மந்தமான தேவையை சுட்டிக்காட்டுகிறது. பணவீக்கம், ஆட்குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு பற்றிய பயம் தனி நபர் நுகர்வைக் கட்டுப்படுத்தி உள்ளது என்று நான் நம்புகிறேன்.
மார்ச் 31, 2023 இல் முடிவடையும் நான்காவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவது கடினம் அல்ல. 2022-23 இல் ஆண்டு வளர்ச்சியின் மதிப்பீடு 7 சதவீதமாக இருந்தால், நான்காவது காலாண்டின் வளர்ச்சி 4.1 ல் இருந்து 4.4 சதவீதம் வரை இருக்கலாம்.
உண்மை தன்மை குறித்த சோதனை
இந்திய பொருளாதாரம் வலுவான எதிர் நீச்சலில் இருக்கிறது. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், கடுமையான பணவியல் கொள்கைகள், பாதுகாப்புவாதம் மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்களில் உயரும் எரிபொருள் விலை, உக்ரைன்-ரஷ்யா போரால் தடைபட்ட பொருளாதார வளர்ச்சி போன்றவற்றால் உலக பொருளாதாரமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. விநியோகச் வழிகளை சீர்குலைக்கும் தடைகள், விலைவாசி உயர்வு, உயரும் வட்டி விகிதங்கள் , வேலை இழப்பு மற்றும் வேலையின்மை; மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்றவற்றால் 2023-24 நிதியாண்டு பிரகாசமாக இல்லை.
இது இப்படி தொடர்ந்தாலும் அரசை ஆதரிப்போரின் உற்சாக பேச்சு தொடர்கிறது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்திருப்பது தான் ஏமாற்றத்தை தரும் விஷயம். இனிப்பு தடவிய இந்திய ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி மாத அறிக்கையில் இந்திய பொருளாதாரம் இன்றைய நிலையில் இருந்தும், பேரியல் பொருளாதார தடையில் இருந்தும் என்று கூறப்பட்டிருப்பதின் அர்த்தம் புரியவில்லை. இத்தோடு நிற்க வில்லை இந்திய ரிசர்வ் வங்கி.
2023-24 பட்ஜெட் இந்திய பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்கும், உயர் பொருளாதார வளர்ச்சி காண்பதற்குமான கருவி என்றும் சொல்கிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதி நிர்வாக அமைப்பில் இருந்தும், கொள்கையில் இருந்தும் விடுபட கூட முடியாத ரிசர்வ் வங்கி தான் இதை சொல்கிறது.
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக நான் எழுதிய மூன்று கட்டுரைகளையும் படித்திருந்தால் அரசின் இந்த மதிப்பீடு என்பது எண்களின் வர்ணஜாலம் தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். அதாவது இவர்கள் எண்களுக்கு லிப்ஸ்டிக் மாதிரி வர்ணம் தீட்டுகிறார்கள். ஆனால் அந்த எண்கள் மனச்சோர்வையே அளிக்கின்றன.
தமிழில்: த. வளவன்
source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-putting-lipstick-on-the-numbers-612641/