16 03 2023
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம் கோவையில் நடைபெற்றது.
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி எழுப்பி மசோதாவை
தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.
விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் இவ்விவகாரதத்தில் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறியதாவது
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று
மேலும், சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tpdk-ashes-sending-portest-to-governor-in-online-rummy-ban-bill-send-back-issue-614283/