ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று முதல் டோக்கன்: அரசு முக்கிய அறிவிப்பு

 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான டோக்கன் இன்று முதல் விநொயோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எல்லா ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவிக்கும்இந்நிலையில் இதன்படி 2024ம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கப்படும்என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 இந்நிலையில் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரூ. 1000 அறிவிக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்ததுஇந்நிலையில் ரூ. 1000 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்தார்.

 இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்று  முதல் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதுடோக்கனில் நாள்நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் எனவும்தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிறது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pongal-gift-token-distrubuted-today-2321285

Related Posts: