சனி, 6 ஜனவரி, 2024

சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொள்ளச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஷங்கர் ஆத்யா மற்றும் ஷாஜகான் ஷேக் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்ள சென்றனர்.

ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்ததையடுத்து,  மத்திய காவல்படை வீரர்களுடன் ஷாஜகான் ஷேக்கின் இல்லத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர்.  அப்போது அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  மேலும் அதிகாரிகளை தாக்கியதோடு , அவர்களது வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினர்.


இதனால்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.  இந்த தாக்குதலில் எதிரொலியாக சோதனை நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும்,  மீண்டும் கொல்கத்தாவுக்கு திரும்பிச் செல்வதாகவும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.



source https://news7tamil.live/attack-on-the-enforcement-officers-who-went-to-check-broken-car-glass.html

Related Posts: