புதன், 17 ஜனவரி, 2024

நல்லிணக்க பேரணி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

 

ஜனவரி 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஜனவரி 22-ஆம் தேதி நான் ஒரு பேரணி நடத்தவுள்ளேன். காளி கோயிலில் பிரார்த்தனை நடத்தியபின், அங்கிருந்து இந்தப் பேரணி தொடங்கப்படும். அதையடுத்து ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த மத நல்லிணக்கப் பேரணி சென்று அங்கு கூட்டம் நடத்தப்படும். நாம் செல்லும் வழியில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்தப் பேரணியில் பங்கேற்பதற்கு அனைவரையும் வரவேற்கிறேன். அதே நாளில் பிற்பகல் 3 மணியளவில் எனது கட்சித் தொண்டர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்துவார்கள்.” என தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல், சிலை பிரதிஷ்டை நடத்த திட்டமிட்டுள்ளதால் சங்கராச்சாரியார்கள் இந்நிகழ்வினைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/religious-harmony-rally-the-opening-day-of-ram-temple-west-bengal-chief-minister-mamata-banerjee-announced.html

Related Posts: