புதன், 3 ஜனவரி, 2024

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர்

 திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தான். பல்வேறு நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, 951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி 2019-ம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்



source https://news7tamil.live/happy-to-inaugurate-state-of-the-art-terminal-building-at-trichy-airport-pm-modi-registers.html