செவ்வாய், 16 ஜனவரி, 2024

காவி உடையில் வள்ளுவர் : கனிமொழி கொடுத்த பதில் இதுதான்

 

மனித நேயத்திற்கு ஒரு நிறம் இருந்தால், அதுதான் வள்ளுருடைய நிறம் என்று தி.மு.க

  எம்.பி கனிமொழி பேசி உள்ளார்.

தி.மு.எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசியதாவது: ” மும்மொழி கொள்கைக்கான தேவை என்னவென்று சொன்னால் அதை புரிந்துகொள்ள முடியும். நமக்குள் பேசிகொள்வதற்கு தமிழ் பயன்படும். அதுபோல உலகில் உள்ள மக்களுடம் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. அதனால் ஆங்கிலம் படிக்க கூடிய தேவை இருக்கிறது. இதையும் தாண்டி 3 வது மொழி படிக்க வேண்டும் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். திருவள்ளுவர் ஒரு துறவி என்று யாரும் சொன்னது  கிடையாது, அவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறது என்ற கருத்து உண்டு.

இல்லறம் பற்றி அவரைப்போல் அழகாக கவித்துவமாக யாராலும் சொல்ல முடியாது. திருக்குறளை படித்தவர்கள் யாரும் அவரை துறவியாக சொல்ல முடியாது. எந்த மதத்தையும் அவர் சாந்தவராக இருக்க முடியாது. எந்த மத அடையாளங்களும் திருக்குறளில் கிடையாது. சனாதனத்தையோ, இந்துத்துவத்தை அவர் மீது திணிக்க முடியாது. இந்த அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மதங்களை கடந்து பேசுவதுதான் திருக்குறள். மனித நேயத்திற்கு ஒரு நிறம் இருந்தால், அதுதான் வள்ளுருடைய நிறம். மனித நேயத்தின் அடுத்த அடியாளம் பெரியார். அதனால் கருப்பு உடை அணியால், வேறு நிறத்திற்கு இடம் இல்லை” என்று தெரிவித்தார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-press-meet-today-tamilnaud-2387632