சென்னையின் புதிய ஐ.டி. ஹப் ஆக சிங்கப் பெருமாள் கோவில் பகுதி உருவெடுக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் சிங்கப்பெருமாள் கோவில் பகுதி இன்றைய காலகட்டத்தில் வேகமாக வளர்ந்துவரும் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி தற்போது சென்னையின் புதிய ஐ.டி. ஹப் ஆக முன்னேறிவருகிறது.
மேலும் இங்கு தற்போது,கேப் ஜெமினி இந்தியா, இன்ஃபோசிஸ், சி.டி.எஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. அருகில் உள்ள மறைமலை நகரில் ஜோகோ மற்றும் மகிந்திரா வேல்ர்ட சிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதி ரியல் எஸ்டேட் துறையிலும் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், ஓஎம்ஆர் (OMR) மற்றும் ஈசிஆர் (ECR) இன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சிங்கபெருமாள் கோயில் சென்னையின் அடுத்த தகவல் தொழில்நுட்ப மையமாக மாற உள்ளது.
source https://tamil.indianexpress.com/technology/singaperumal-koil-poised-to-become-chennais-next-it-hub-4317662