/indian-express-tamil/media/media_files/JbqTQcGQDYcr2OOzQZmj.jpg)
அக்டோபர் 8 முதல் வடக்கு இஸ்ரேல் மீது தினமும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் இரு இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவரும் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை நேற்று (மார்ச் 4) காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் உள்ள மோஷாவ் (கூட்டு விவசாய சமூகம்) என்ற தோட்டத்தை தாக்கியது என்று மீட்பு படைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம் (எம்.டி.ஏ) ஜாக்கி ஹெல்லர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : One Indian killed, another two injured in anti-tank missile attack in Israel’s north
இந்த தாக்குதலில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். அவரது சடலம் சிவ் (Ziv) மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தாக்குதலில் காயமடைந்த புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்னர்.
இதில், முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதால் ஜார்ஜ் பெட்டா திக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது, உடல் நலம் தேறி, தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் அவரால் பேச முடியும்,” என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் லேசான காயமடைந்த மெல்வின் வடக்கு இஸ்ரேலிய நகரமான சபீடில் (Safed) உள்ள சிவ் (Ziv) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் எம்.டி.ஏ (MDA) தெரிவித்திருந்தது.
காசா பகுதியில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ஹமாஸுக்கு ஆதரவாக அக்டோபர் 8 முதல் வடக்கு இஸ்ரேல் மீது தினமும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வரும் லெபனானில் உள்ள ஷியைட் ஹெஸ்புல்லா பிரிவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நேற்று ஏவுதளத்தை பீரங்கி மற்றும் ஷெல் மூலம் பதிலடி கொடுத்ததாகக் கூறியது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே நடந்த மோதல்களில் இஸ்ரேலிய தரப்பில் ஏழு பேர் மற்றும் 10 (ஐ.டி.எஃப்) வீரர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்திய தாக்குதலின்போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட 229 பேர் உட்பட ஹிஸ்புல்லா தரப்பில் பெரும்பாலான உயிரிழப்புகள் லெபனானில் நடந்துள்ளது. இதில் சில சிரியாவிலும் நடந்தன.
மற்ற குழுக்களைச் சேர்ந்த மற்றொரு 37 செயற்பாட்டாளர்கள், ஒரு லெபனான் சிப்பாய் மற்றும் குறைந்தது 30 பொதுமக்களும் அக்டோபர் 8 முதல் கொல்லப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/indian-killed-injured-anti-tank-missile-attack-israel-north-4234159





