வெள்ளி, 5 ஜூலை, 2024

சீனாவில் கொட்டித்தீர்த்த கனமழை; 2.4 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்!

 

சீனாவில் கடும்மழை காரணமாக 240,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீனா கடந்த சில மாதங்களாக மோசமான பருவநிலையை எதிர்கொள்கிறது. ஒருபக்கம் கொளுத்தும் வெயில், மறுபக்கம் மக்களை ஆட்டிப்படைக்கும் அடைமழை. உலகம் மோசமான வானிலையை எதிர்கொள்ள வெப்பவாயு வெளியேற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீனா அதில் முன்னணி வகிக்கிறது. கடுமையான மழையால் கிழக்கில் இருக்கும் அன்ஹுய் (Anhui) மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கிழக்கில் யாங்ஸி (Yangtze) நதியிலும் மற்ற ஆறுகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால,  சீனாவில் கடும்மழை காரணமாக 240,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


source https://news7tamil.live/heavy-rain-in-china-2-4-lakh-people-evicted-from-their-homes.html