செவ்வாய், 2 ஜூலை, 2024

பி.என்.எஸ் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு; எங்கே? யார் மீது தெரியுமா?

 

ந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றான பாரதிய நியாய சன்ஹிதா 2024 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் முதல் வழக்கு ஜூலை 1ஆம் தேதியன்று மத்திய டெல்லி கமலா மார்க்கெட் பகுதியில் பொது வழியைத் தடுத்ததாகக் தெருவோர வியாபாரி மீது பதியப்பட்டது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள், “புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) விதிகளின் கீழ் டெல்லி காவல்துறை தனது முதல் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தனர்.

அதாவது, புது டெல்லி ரயில் நிலையத்தின் கால் மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவித்து விற்பனை செய்ததற்காக பாரதிய நியாய சன்ஹிதாவின் 285வது பிரிவின் கீழ் தெருவோர வியாபாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் தாக்கல் செய்யப்படும் அனைத்து எஃப்ஐஆர்களும் பிஎன்எஸ் விதிகளைப் பின்பற்றும், ஜூன் 30 வரை பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடரும்.

பிஎன்எஸ், 358 பிரிவுகளுடன், ஐபிசியின் கீழ் 511 பிரிவுகளைக் குறைத்து, புதிய குற்றங்களை அறிமுகப்படுத்துகிறது, சிலருக்கு சிறைத்தண்டனையை நீட்டிக்கிறது, அபராதத்தை அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-first-case-under-the-bharatiya-nyaya-sanhita-act-has-been-registered-in-delhi-4789902