ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு; காரணம் என்ன?

 

ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு; காரணம் என்ன? 31 08 24 


source https://tamil.indianexpress.com/india/haryana-election-commission-poll-dates-changed-6940732
Election Commissioner

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வட இந்தியாவில் முக்கிய மாநிலமான ஹரியாணாவில், வரும் அக்டோபர் 1-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது, பிஷ்னோய் சமூகத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான திருவிழா நடைபெற உள்ளதன் காரணமாக, அக்டோபர் 1-ந் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,

அகில இந்திய பிஷ்னோய் மகாசபாவின் தேசியத் தலைவர் பிகானேரிடமிருந்து தேர்தல் ஆணையம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பிஷ்னோய் குடும்பங்கள் ராஜஸ்தானில் உள்ள முகம் என்ற தங்கள் சொந்த கிராமத்திற்குச் செல்வார்கள். இதனால், அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படும்.

வாக்குரிமை மற்றும் சமூகத்தின் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் மதிக்கும் வகையில், தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது, இது அவர்களின் குரு ஜம்பேஸ்வரரை நினைவுகூரும் வகையில் 300 ஆண்டுகள் பழமையான நடைமுறையை நிலை நிறுத்தும் வகையில் கொண்டாடப்படும் திருவிழா என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்மு மற்றுமு் காஷ்மீர் பகுதியில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டம் செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதி கட்டம் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.