/indian-express-tamil/media/media_files/tKMMyLP7hBNcn1mIjwBc.jpg)
சென்னையில் அடுத்த அதிர்ச்சிகர சம்பவமாக ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த ஒரு மாதமாக நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்தநிலையில், நோயாளி இன்று சிகிச்சைக்கு வந்தபோது மீது மருத்துவர் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலையில் சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவர்கள் மீதான அடுத்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-patient-attack-stanley-hospital-doctor-another-incident-in-one-day-7577923





