ஞாயிறு, 3 நவம்பர், 2024

கூகுள் பே, போன் பே பயனர்கள் கவனத்திற்கு.. யு.பி.ஐ லைட் அம்சத்தில் வந்தது புதிய மாற்றம்; என்னது தெரியுமா?

 UPI Lite.jpg

யு.பி.ஐ மேமெண்ட்ஸ்-இன் யு.பி.ஐ லைட் அம்சத்தில் என்.பி.சி.ஐ புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்துள்ளது.  அதாவது ஆட்டோ பே பேலன்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்துள்ளது. 
கூகுள் பே, போன் பே, பே டிஎம் உள்ளிட்டவற்றில் உள்ள யு.பி.ஐ லைட் அம்சத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த  ஆப்ஷன் செயல்படும் எனக் கூறியுள்ளது .

யு.பி.ஐ லைட் என்பது டிஜிட்டல் வாலட் ஆகும். சிறிய தொகை கொண்ட பரிவர்த்தனைகளை இதன் மூலம் பின் நம்பர், பாஸ்வேர்ட் இல்லாமல் செய்யலாம். யு.பி.ஐ லைட் மூலம் தினமும் ரூ.4000வரை பின் நம்பர் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம்.  யு.பி.ஐ லைட்டிற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப வேண்டும். நீங்களாக பணத்தை அனுப்ப வேண்டும். 

இந்நிலையில் புதிய அம்சத்தில் பணம் தீர்ந்தால் ஆட்டோ பே பேலன்ஸ் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பணம் அனுப்பும்படி கொண்டு வரப்பட்டுள்ளது. யு.பி.ஐ லைட் ஆப் சென்று இந்த ஆப்ஷனை எனெபிள் செய்யலாம். 

அதே நேரம் என்.பி.சி.ஐ  யு.பி.ஐ லைட்பேலன்ஸ், இருப்பு தொகையை ரூ.5000 ஆக உயர்த்தியுள்ளது. 



source https://tamil.indianexpress.com/technology/upi-lite-auto-pay-balance-feature-how-to-use-it-7380389