புதன், 12 நவம்பர், 2025

2026ம் ஆண்டுக்கான பொது விடுமுறை அறிவிப்பு: மொத்தம் 24 நாட்கள் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

 


public holiday

2026-க்கான பொது விடுமுறை அறிவிப்பு: மொத்தம் 24 நாட்கள் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, 2026 ஆம் ஆண்டிற்கான 24 நாட்கள் கொண்ட அரசு பொது விடுமுறைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாநில அரசின் உள்துறைத் துறை சார்பில், முதன்மைச் செயலர் முருகானந்தம் கையெழுத்திட்ட இந்த உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் அரசுத் துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும். இந்த 24 நாட்களுடன், 2026 ஆம் ஆண்டில் வரும் 52 ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்தால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மொத்தமாக 76 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன. அரசு உத்தரவின்படி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நாட்களும், அவற்றின் கிழமைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்)

பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்)

திருவள்ளுவர் தினம் – ஜனவரி 16 (வெள்ளி)

உழவர் திருநாள் – ஜனவரி 17 (சனி)

குடியரசு தினம் – ஜனவரி 26 (திங்கள்)

தைப்பூசம் – பிப்ரவரி 1 (ஞாயிறு)

தெலுங்கு புத்தாண்டு தினம் – மார்ச் 19 (வியாழன்)

ரம்ஜான் (ஈதுல் பித்ர்) – மார்ச் 21 (சனி)

மகாவீர் ஜெயந்தி – மார்ச் 31 (செவ்வாய்)

வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் – ஏப்ரல் 1 (புதன்) (வங்கிகளுக்கு மட்டும்)

புனித வெள்ளி – ஏப்ரல் 3 (வெள்ளி)

தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் – ஏப்ரல் 14 (செவ்வாய்)

மே தினம் – மே 1 (வெள்ளி)

பக்ரீத்– மே 28 (வியாழன்)

முகரம் (யோம்-இ-ஷஹாதத்) – ஜூன் 26 (வெள்ளி)

சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15 (சனி)

மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) – ஆகஸ்ட் 26 (புதன்)

கிருஷ்ண ஜெயந்தி – செப்டம்பர் 4 (வெள்ளி)

விநாயகர் சதுர்த்தி – செப்டம்பர் 14 (திங்கள்)

காந்தி ஜெயந்தி – அக்டோபர் 2 (வெள்ளி)

ஆயுத பூஜை – அக்டோபர் 19 (திங்கள்)

விஜயதசமி – அக்டோபர் 20 (செவ்வாய்)

தீபாவளி – நவம்பர் 8 (ஞாயிறு)

கிறிஸ்துமஸ் – டிசம்பர் 25 (வெள்ளி)

இந்த விடுமுறைகள் தவிர, ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கம்போல பொது விடுமுறையாகவே இருக்கும். இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 52 ஞாயிறு + 24 அரசு விடுமுறை, என 76 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைகின்றன.

குறிப்பு: ஏப்ரல் 1 (புதன்கிழமை) அன்று வரும் வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் விடுமுறை, வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-holidays-2026-full-list-of-24-holidays-announcedfrom-new-year-to-christmas-10648870