பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகள் தொடங்கியுள்ள நிலையிலும், மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான பதிவுகள் தொடங்கியுள்ள நிலையிலும், மாணவர் சேர்க்கை என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
இதுகுறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளதன்படி,
பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது. ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர்க்கை பெற ஜே.இ.இ தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சில தனியார் நிறுவனங்களில் சேர்க்கைப் பெற அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் சேர்க்கை பெற வேண்டும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடத்தும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள வேண்டும். இது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படும்.
இதில் தனியார் கல்லூரிகளில் 60% இடங்கள் அரசு கலந்தாய்வு அடிப்படையிலும், 40% இடங்கள் மேனேஜ்மெண்ட் கோட்டா அடிப்படையிலும் நிரப்பப்படும். இதில் தற்போது முன்னணி தனியார் நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு டாப் பொறியியல் கல்லூரிகள்
அரசு உதவிப்பெறும் கல்லூரிகள்
1). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
2). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
3) தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
தனியார் கல்லூரிகள்
1). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
2). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
3). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
4). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
5). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
6). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
7). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
8). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
9). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
10). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
11). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
12). வி.எஸ்.பி இன்ஜினியரிங் காலேஜ், கோவை
13). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
14). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
15). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
16). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
17). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-engineeing-admission-top-colleges-anna-university-placements-high-cut-off-management-quota-10808984





